மேலும் அறிய

சேலம்: கொடிகம்பம் நடுவதில் பிரச்னை - விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது போலிசார் தடியடி

’’காவல்துறையினர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது போலீசார் தடியடி’’

சேலம் - தருமபுரி மாவட்ட எல்லையில் உள்ளது ஓமலூர் அடுத்த உள்ள கே.மோரூர். இப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் கொடிக்கம்பம் நடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. கடந்த 17 ஆம் தேதி சேலம் வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இப்பகுதியில் கொடி ஏற்றுவதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஏற்கனவே அங்கு திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கொடி கம்பங்கள் இருக்கும் நிலையில் இடையூறு ஏற்படுவதால் இனி அப்பகுதியில் கொடிக்கம்பங்கள் நடக்கூடாது என கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது காவல் துறைக்கும், வருவாய் துறைக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடி கம்பத்தை நடுவதற்கு காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் அனுமதி  மறுத்துள்ளனர். 

சேலம்: கொடிகம்பம் நடுவதில் பிரச்னை - விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது போலிசார் தடியடி

மேலும் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அறிவுறுத்தியதன் அடிப்படையில் அன்றைய தினம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சிலர் கே.மோரூர் பேருந்து நிறுத்தம்  பகுதியில் தடையை மீறி கொடிக்கம்பம் நடுவதற்கு முயற்சித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தீவட்டிப்பட்டி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை தடுத்துள்ளனர். அப்போது காவல்துறையினருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அனுமதியை மீறி நடப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பத்தை காவல்துறையினர் பிடுங்கி எடுத்துச் சென்றனர். 

சேலம்: கொடிகம்பம் நடுவதில் பிரச்னை - விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது போலிசார் தடியடி

அப்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காவல்துறையினரை  கல் வீசி தாக்கியதால்  அப்பகுதி போர்க்களமாக மாறியது அப்பகுதியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர காவல் துறையினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி நடத்தி கலைத்தனர். இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று முகாமிட்டுள்ளார். தடையை மீறி கொடிக் கம்பம் நடும் விவகாரத்தில் ஏற்பட்ட இந்த பிரச்சனையால் கே.போரூர் பகுதியில்  பரபரப்பு நிலவி வருகிறது. சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையினரின் தடியடி சம்பவம் தொடர்பாக சேலம் மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் அளித்துளள்ளனர். மேலும் காவல்துறையினரின் இச்செயலை கண்டித்து சேலம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாக கே.மோருர் பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது

தலைப்பு செய்திகள்

மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
சொந்த ஊரில் எடப்பாடி பழனிசாமி திடீர் தீவிர ஆலோசனை... சட்டமன்றத்தில் பேசப்போவது என்ன?
சொந்த ஊரில் எடப்பாடி பழனிசாமி திடீர் தீவிர ஆலோசனை... சட்டமன்றத்தில் பேசப்போவது என்ன?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget