Bigg Boss 6 Tamil Winner: ரூ.50 லட்சம் பணத்துடன் பிக்பாஸ் டைட்டில் வின்னரான அஸிம்... கொண்டாடும் ரசிகர்கள்..!
Bigg Boss 6 Tamil Title Winner: பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அஸிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
![Bigg Boss 6 Tamil Winner: ரூ.50 லட்சம் பணத்துடன் பிக்பாஸ் டைட்டில் வின்னரான அஸிம்... கொண்டாடும் ரசிகர்கள்..! Bigg Boss 6 Tamil Title Winner Mohammed Azeem BB Tamil Season 6 Grand Finale Winner Details Prize Money Bigg Boss 6 Tamil Winner: ரூ.50 லட்சம் பணத்துடன் பிக்பாஸ் டைட்டில் வின்னரான அஸிம்... கொண்டாடும் ரசிகர்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/22/9bc8f89853f44d7c3d3656bf2424a14d1674407233250572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அஸிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரது தேர்வுக்கு இணையவாசிகள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 6
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து 6வது சீசனாக கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் ஜிபி முத்து, திருநங்கை ஷிவின் கணேசன், அசல் கோலார், நிவாஷினி, குயின்ஸி, சாந்தி, விஜே மகேஸ்வரி, அஸிம், ராபர்ட் மாஸ்டர், ஏடிகே, அஸிம், ஜனனி, கதிரவன் ,மணிகண்டா , ரச்சிதா,நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், டிக்டாக் பிரபலம் தனலட்சுமி,ராம் ராமசாமி,விக்ரமன் மற்றும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக மைனா நந்தினி ஆகியோர் பங்கேற்றனர்.
View this post on Instagram
ஆரம்பம் முதலே முந்தைய சீசன்களை விட இந்த சீசன் கொஞ்சம் சுவாரஸ்யம் இல்லாமலேயே சென்றது. ஆனாலும் திரை பிரபலங்கள் தவிர்த்து மக்கள் போட்டியாளர்களும் முதல்முறையாக களம் கண்டதால் பார்வையாளர்கள் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வந்தனர்.
இறுதிப்போட்டி
இந்நிலையில் பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பானது. விக்ரமன், அஸிம், ஷிவின் 3 பேரும் இறுதிப்போட்டிக்கான பட்டியலில் இருந்த நிலையில், இவர்களில் யார் பிக்பாஸ் டைட்டில் வெல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. நீண்ட நெடிய உரையாடல்கள், கலை நிகழ்ச்சிகளுக்குப் பின் 3 போட்டியாளர்களும் மேடை ஏற்றப்பட்டனர். இதில் அஸிம் பிக்பாஸ் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பிக்பாஸ் கோப்பையுடன் ரூ.50 லட்சம் பணம் வழங்கப்பட்டது. 2வது இடத்தை விக்ரமனும், 3வது இடத்தை ஷிவினும் பெற்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)