அறுவை சிகிச்சை மூலமாகதான் குழந்தை பெற்றேன்...ஜி.வி பிரகாஷின் முன்னாள் மனைவி பாடகி சைந்தவி ஓப்பன்
Saindhavi: கர்ப்பமடைவதற்கு முன் தான் உடல் எடை கூட இருந்ததாகவும் எவ்வளவு முயற்சி செய்தும் உடல் எடையை குறைக்க முடியவில்லை என பாடகி சைந்தவி தெரிவித்துள்ளார்

ஜி.வி பிரகாஷ் - சைந்தவி
கோலிவுட்டில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஜோடி ஜி.வி சந்தவி . பள்ளி காலத்தில் இருந்து நண்பர்களாக இருந்து வந்த இருவரும் 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இருவருக்கும் ஒரு மகள் இருக்கிறார். ஜிவி இசையில் பல உருக்கமான பாடல்களை சந்தவி பாடியிருக்கிறார். இருவரும் சேர்ந்து பல பாடல்கள் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். கடந்த 2024 ஆம் ஆண்டும் ஜி.வி சைந்தவி தாங்கள் விவாகரத்து பெற இருப்பதாக அறிவித்தார்கள். இந்த விவாகரத்து தொடர்பாக ஜிவி பற்றி பல தகவல்கள் சமூக வலைதளத்தில் முன்வைக்கப்பட்டன.
விவாகரத்து மனுதாக்கல்
திருமண உறவில் இருந்து வெளிவந்த பின்னும் ஜி.வி மற்றும் சைந்தவி ஒருத்தர் மீது ஒருத்தர் அளவுகடந்த மரியாதையையும் அன்பையும் வெளிப்படுத்தி வருகிறார். இருவரும் சேர்ந்து காண்சர்டில் சேர்ந்து பாடியது ரசிகர்களை கவர்ந்தது. விவாகரத்திற்கு பின்னும் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
ஜி.வி சைந்தவி இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜ்ராகி விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்தார்கள். இந்த வழக்கும் நீதிபதி செல்வ சுந்தரி முன் விசாரணைக்கு வந்தது. ஜி.வி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதி முன் தெரிவித்தார்கள். விசாரணை முடிந்து இருவரும் ஒரே காரில் சேர்ந்து சென்றது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
குழந்தை பெற்றுக் கொண்டது பற்றி சைந்தவி
சைந்தவி பழைய நேர்காணல் ஒன்றில் பேசியது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அவர் " நான் கர்ப்பமாக இருப்பதற்கு முன்பே உடல் எடை கூடிதான் இருந்தேன். எவ்வலவு முயற்சி செய்தும் எடையை குறைக்க முடியவில்லை. அறுவை சிகிச்சை மூலம் தான் குழந்தை பெற்றுக் கொண்டேன். நான் எடை கூடுதலாக இருப்பதைப் பார்க்கும் பலர் சாப்பாடு குறைவாக சாப்பிடும்படி சொன்னார்கள். நீங்களா எனக்கு சாப்பாடு போடுகிறீர்கள் என்று கேட்கனும் என்று தோன்றும். அதன் பின் தான் நம் உடல் நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நான் புரிந்துகொண்டேன். என்னுடைய வாழ்க்கையில் நான் கஷ்ட காலங்களை கடந்து வந்திருக்கிறேன். இதெல்லாம் ஏன் எனக்கு நடக்கிறது என நினைத்திருக்கிறேன். ஒருகட்டத்திற்கு மேல் இதற்கு ஏன் இவ்வளவு வருத்தபட வேண்டும் என்று யோசித்தேன். நம்மை வருத்தப்பட வைக்கும் நபர்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் . சில நேரங்களில் நமக்கு நெருக்கமானவர்களே காயப்படுத்தி இருக்கிறார்கள். எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். நான் கவலைப்பட மாட்டேன் என்றே சொல்லவில்லை. ஆனால் உங்கள் மகிழ்ச்சியை விட்டுக்கொடுக்க கூடாதூ. உங்களால் எல்லாரைய்ம் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியாது. அதற்கு முயற்சியும் செய்ய வேண்டாம்." என அவர் தெரிவித்துள்ளார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

