ஹெல்தியா இருக்க தூக்கம் ஏன் முக்கியம்? ஆய்வு சொல்வது என்ன?

Published by: ஜான்சி ராணி

ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும். சரிவிகித உணவு, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, உடற்பயிற்சி, மனநல ஆரோக்கியம் என்பதன் அவசியம் குறித்து மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

சரிவிகித உணவு, சீரான உடற்பயிற்சி என இருந்தாலும் சரியான தூக்கம் இல்லையென்றால் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

போதுமான அளவு தூக்கம் இல்லையென்றால், இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் சீரற்ற நிலை ஏற்படும், க்ரேவிங்க்ஸ், அதிக இனிப்பான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற உணர்வு மேலெழும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கொஞ்ச நாட்கள் சீரான தூக்கம் இல்லையென்றாலும், உடலில் தற்காலிகமாக இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் ஏற்பட்டு, இரத்த சர்க்கரை அளவை சீராக வைப்பதில் சிக்கல் ஏற்படும்.

நன்றாக சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்தும் தூங்கவில்லை என்றால் டைப் -2 டயபடிக் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கினறன.

சரியான தூக்கம் இல்லையென்றால் ’cortisol’ லெவல் அதிகரிக்கும். இது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன். இதனால் மெட்டபாலிசம் பாதிக்கப்படும்.

சீரான தூக்கம் மிகவும் அவசியம். தினமும் ஒரே நேரத்தில் தூங்கி எழுவதை வழக்கமாக கொள்ளவும்.

இது ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்ட தகவல் மட்டுமே. கூடுதல் தகவலுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சிறந்த வழி.