KGF 2 Collection : உலகம் முழுவதும் மாஸ் காட்டும் கே.ஜி.எப். 2...! ரியல் பீஸ்ட்டாக வாரிகுவிக்கும் வசூல் நிலவரம் இதோ...!
உலகம் முழுவதும் கே.ஜி.எப். படத்தின் இரண்டாம் பாகம் வசூலை குவித்து வருகிறது.
இந்திய சினிமாவே கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கே.ஜி.எப். படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியாகியது. படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை அளித்து வருகின்றனர். சென்னையில் கே.ஜி.எப். 2ம் பாகமான இன்று எந்த திரையரங்கிலும் டிக்கெட் கிடைக்காத அளவிற்கு ஹவுஸ்புல் ஆகியுள்ளது. இதனால், திரையரங்க உரிமையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
சென்னை :
சென்னையில் ஏப்ரல் 14ந் தேதி நிலவரப்படி பீஸ்ட் 1.61 கோடி வசூல் குவித்துள்ளது. கே.ஜி.எப். 2 படம் 67 லட்சம் குவித்துள்ளது.
கேரளா :
கேரளாவில் நடிகர் விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஆனால், கேரளாவிலே கே.ஜி.எப். படத்தின் வசூலை பீஸ்ட் வசூலை முறியடித்துள்ளது. எப்ரல் 14-ந் தேதி நிலவரப்படி கேரளாவில் விஜய்யின் பீஸ்ட் படம் ரூபாய் 6.6 கோடி குவித்தது. ஆனால், கே.ஜி.எப். படம் ரூபாய் 7.1 கோடி குவித்து அசத்தியுள்ளது. விஜய்யின் பீஸ்ட் படத்தின் வசூலையே கே.ஜி.எப். முறியடித்திருப்பது கே.ஜி.எப். ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி : (முதல் நாள்)
இந்தி மொழியில் வெளியான கே.ஜி.எப். மற்றும் பீஸ்ட் படங்களில் கே.ஜி.எப். படம் மாபெரும் வசூலை குவித்துள்ளது. கே.ஜி.எப். படம் முதல் நாளான இன்று 54 கோடி வசூல் குவித்துள்ளது. பீஸ்ட் படம் ரூபாய் 50 லட்சம் வசூல் குவித்துள்ளது. இந்தியில் முதல் நாளில் அதிக வசூலை குவித்த படம் என்ற மாபெரும் சாதனையையும் கே.ஜி.எப். 2 படைத்துள்ளது.
ஆஸ்திரேலியா : (முதல்நாள்)
ஆஸ்திரேலியாவில் கே.ஜி.எப். படம் ரூபாய் 5 லட்சத்து 1 ஆயிரம் டாலர் வசூலை குவித்துள்ளது. பீஸ்ட் படம் 2 லட்சத்து 83 ஆயிரம் டாலரை குவித்துள்ளது.
மலேசியா : (தமிழ்)
மலேசியாவில் கே.ஜி.எப். சேப்டர் 2 படம் தமிழில் வெளியான படங்களிலே அதிக வசூலை குவித்து வருகிறது. இரண்டாவது இடத்தில் பென்டாஸ்டிக் பீஸ்ட் படம் உள்ளது. மூன்றாவது இடத்தில் பீஸ்ட் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
அமெரிக்கா :
அமெரிக்காவில் ஏப்ரல் 14-ந் தேதி நிலவரப்படி கே.ஜி.எப். 540 ஆயிரம் டாலர் வசூலை குவித்துள்ளது. பீஸ்ட் 80 ஆயிரம் டாலர் வசூலை குவித்துள்ளது.
இந்தியா முழுவதும் நேற்று கே.ஜி.எப். 2ம் பாகம் வெளியான அனைத்து மாநிலங்களிலும் கே.ஜி.எப். படமே நம்பர் 1இடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்