மேலும் அறிய

அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு: நன்றி தெரிவித்து 3 பக்க அறிக்கை வெளியிட்ட கமல்ஹாசன்

திரையிட்ட இடங்களில் எல்லாம் அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

திரையிட்ட இடங்களில் எல்லாம் அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரையிட்ட இடங்களிலெல்லாம் அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. அமரன் திரைப்படத்தை அறிவித்தபோது சில வேலைகள் சந்தோஷத்தை தரும். சில வேலைகள் கௌரவத்தையும் பெருமையும் தரும். அமரன் அனைவருக்குமே பெருமை தேடித் தரும் என்று சொன்னேன். அமரன் அடைந்திருக்கும் வெற்றி மக்கள் நல்ல படத்தைக் கொண்டாடுவார்கள் எனும் நம்பிக்கையை உறுதி செய்திருக்கிறது. 

மேஜர் முகுந்த் வரதராஜன் சிந்திய ரத்தத்திற்கும் அவரது அன்புக்குரியவர்கள் சிந்திய கண்ணீருக்குமான எங்களின் எளிய காணிக்கைதான் இந்த அமரன். இது தனியொரு நபரின் சரிதை மட்டுமல்ல. இந்திய நிலப்பரப்பை காக்கும் ஒவ்வொரு வீரர் மற்றும் ஒவ்வொரு இந்தியக் குடும்பத்தின் கதையும் தான். 

மேஜர் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்திருக்கிறார் தம்பி சிவகார்த்திகேயன். இந்த படத்தின் மூலம் சிவகார்த்திகேயனின் திரைப்பயணம் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. அவரது முழுமையான பங்களிப்பும் உழைப்பும் திரை ரசிகர்களால் நீண்ட காலத்துக்கு போற்றப்படும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துகள் சிவகார்த்திகேயன். 

மேஜரின் காதல் மனைவி இந்து வர்கீஸ் இந்த தேசமே போற்றிய இரும்பு பெண்மணி. அவரது பாத்திரமாகவே மாறியிருக்கிறார் சாய்பல்லவி. அவர் இப்படத்திற்கு பெரும் பலம். இசையால் உயிரூட்டியிருக்கிறார் ஜி.வி. ஒரு மகத்தான மாவீரனின் சரிதையை படமாக எடுப்பது எளிதான காரியம் அல்ல. விரிவான ஆய்வுகள், களப்பணிகள் செய்து தரவுகளை திரட்டி அவற்றை தொகுத்து சுவாரஸ்யமான திரைக்கதையாக்கி இருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. 

ஒரு நல்ல திரைப்படம் என்பது தனிக்கனவு அல்ல. மொத்த அணியும் நன்மையில் நம்பிக்கை வைத்து உழைக்க வேண்டிய பொதுக்கனவு. தன்னைத் தந்து மண்ணைக்காத்த தமிழ் வீரனுக்கான சிறந்த சமர்ப்பணமாகவும் நாமறியாத ராணுவ வாழ்க்கையை அவர்களின் குடும்பத்தார் செய்யும் தியாகங்களை மக்கள் அறிந்து கொள்ள கூடிய படமாகவும் அமரன் அமைந்ததில் நானும் எனது சகோதரர் ஆர். மகேந்திரனும் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் பெருமை கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Nainar Slams DMK: “Disaster மாடல் ஆட்சி“; “முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி.. வாக்குறுதி என்னாச்சு.?“: நயினார் அசத்தல் பேச்சு
“Disaster மாடல் ஆட்சி“; “முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி.. வாக்குறுதி என்னாச்சு.?“: நயினார் அசத்தல் பேச்சு
பட்டதாரிகளுக்கு பொன்னான வாய்ப்பு! ரூ.6 லட்சம் மானியத்துடன் சுய தொழில்: உடனே விண்ணப்பிங்க!
பட்டதாரிகளுக்கு பொன்னான வாய்ப்பு! ரூ.6 லட்சம் மானியத்துடன் சுய தொழில்: உடனே விண்ணப்பிங்க!
நீட்டிக்கப்பட்ட மாணவர் சேர்க்கை அவகாசம்; ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? இதோ விவரம்!
நீட்டிக்கப்பட்ட மாணவர் சேர்க்கை அவகாசம்; ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? இதோ விவரம்!
Amit Shah Arrived: நெல்லை வந்தடைந்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா - பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்பு
நெல்லை வந்தடைந்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா - பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue
சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம் வெச்சு செய்யும் எதிர்க்கட்சிகள் பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR? | Congress | Rahul Gandhi vs ECI
ED raid Dmk ministers : ED வலையில் 3 அமைச்சர்கள்?நெருங்கும் சட்டமன்ற தேர்தல்நெருக்கடி கொடுக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Slams DMK: “Disaster மாடல் ஆட்சி“; “முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி.. வாக்குறுதி என்னாச்சு.?“: நயினார் அசத்தல் பேச்சு
“Disaster மாடல் ஆட்சி“; “முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி.. வாக்குறுதி என்னாச்சு.?“: நயினார் அசத்தல் பேச்சு
பட்டதாரிகளுக்கு பொன்னான வாய்ப்பு! ரூ.6 லட்சம் மானியத்துடன் சுய தொழில்: உடனே விண்ணப்பிங்க!
பட்டதாரிகளுக்கு பொன்னான வாய்ப்பு! ரூ.6 லட்சம் மானியத்துடன் சுய தொழில்: உடனே விண்ணப்பிங்க!
நீட்டிக்கப்பட்ட மாணவர் சேர்க்கை அவகாசம்; ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? இதோ விவரம்!
நீட்டிக்கப்பட்ட மாணவர் சேர்க்கை அவகாசம்; ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? இதோ விவரம்!
Amit Shah Arrived: நெல்லை வந்தடைந்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா - பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்பு
நெல்லை வந்தடைந்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா - பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்பு
அழகு கலையில் அசத்த வாய்ப்பு! அரசு சான்றிதழுடன் 3 நாள் மேக்கப் மாஸ்டர் கிளாஸ் பயிற்சி! முன்பதிவு அவசியம்!
அழகு கலையில் அசத்த வாய்ப்பு! அரசு சான்றிதழுடன் 3 நாள் மேக்கப் மாஸ்டர் கிளாஸ் பயிற்சி! முன்பதிவு அவசியம்!
மத்திய அரசின் புதிய சட்டத் திருத்தங்கள்: ஜனநாயகத்திற்கு பேராபத்து! எச்சரிக்கும் சண்முகம்
மத்திய அரசின் புதிய சட்டத் திருத்தங்கள்: ஜனநாயகத்திற்கு பேராபத்து! எச்சரிக்கும் சண்முகம்
Nainar Vs KKSSRR: “நகைச்சுவை என்ற பெயரில் பெண்களை மட்டம் தட்டுவதா“ - அமைச்சர்களை வெளுத்த நயினார் நாகேந்திரன்
“நகைச்சுவை என்ற பெயரில் பெண்களை மட்டம் தட்டுவதா“ - அமைச்சர்களை வெளுத்த நயினார் நாகேந்திரன்
Vinayagar Chaturthi 2025: சென்னையில் விநாயகர் சிலைகளை வைத்து எப்படி வழிபாடு செய்ய வேண்டும்? - போலீஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவுரை
சென்னையில் விநாயகர் சிலைகளை வைத்து எப்படி வழிபாடு செய்ய வேண்டும்? - போலீஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவுரை
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.