மேலும் அறிய

இன்று ஒரே நாளில் 8 படங்கள் தியேட்டரில் ரிலீஸ்: கொரோனாவுக்கு பின் அதிக திரைப்படங்கள்!

தியேட்டரில் படங்கள் வெளியிட மீண்டும் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்ட துவங்கிவிட்ட நிலையில், வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதி ஒரே நாளில் 8 திரைப்படங்கள் வெளியிடப்படவுள்ளன.

கொரோனாவால் திரையரங்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து, 100 சதவிகித டிக்கட் விற்பனையுடன் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, படங்களை தியேட்டரில் வெளியிட மீண்டும் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்ட துவங்கிவிட்டனர். இறுதி கட்ட பணிகள் முடிவுற்ற தமிழ் திரைப்படங்கள் அனைத்தும் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டிசம்பர் 10ஆம் தேதியான இன்று ஒரே நாளில் ஏகப்பட்ட திரைப்படங்கள் வெளியிடப்படவுள்ளன. இவை அனைத்தும் தியேட்டரில் வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ஒரே நாளில் 8 படங்கள் தியேட்டரில் ரிலீஸ்: கொரோனாவுக்கு பின் அதிக திரைப்படங்கள்!

க்:

'ஜிவி’ திரைப்படத்திற்குத் திரைக்கதை எழுதிய பாபு தமிழ் தற்போது புதுமுக நடிகர்களை வைத்து ‘க்’ என்ற படத்தை உருவாக்கியுள்ளார். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன், YG மகேந்திரன், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிக்கின்றனர். கவாஸ்கர் இசையமைக்கும் இப்படத்தை தர்மராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. புதுவகை உளவியல் ஃபேண்டஸி ஜானரில் உருவாகியுள்ள ‘க்’ திரைப்படம், இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஜெயில்:

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயில்'. க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் ஸ்ரீதரண் மாரிதாசன் இப்படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தை டிசம்பர் 9-ந் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், இதனை வெளியிட தடை விதிக்க கோரி ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது, வழக்குகளை தீர்த்துவைத்து இன்று ஜெயில் திரைப்படம் வெளியாகி உள்ளது.

முருங்கைக்காய் சிப்ஸ்:

நடிகர் சாந்தனு மாஸ்டர் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் தற்போது முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் அவர் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடி சேர்ந்துள்ளார் அதுல்யா ரவி. இவர்களுடன் கே பாக்யராஜ் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். படத்தில் மேலும் மனோபாலா, யோகி பாபு, ஊர்வசி ஆனந்தராஜ், மயில்சாமி, உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருந்த இந்த படம் இன்று வெளியாகியுள்ளது. முதலிரவில் கணவன் மனைவி  இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 8 படங்கள் தியேட்டரில் ரிலீஸ்: கொரோனாவுக்கு பின் அதிக திரைப்படங்கள்!

மூணு முப்பத்திமூணு:

இன்று இன்னொரு பிக்பாஸ் பிரபலத்தின் திரைப்படமாக வெளியாக இருப்பது, 3:33 திரைப்படம். நடன இயக்குனர் சாண்டி ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் ஆவிகளை மர்ம சக்திகளை ஆராயும் ஒரு ஆய்வாளராக முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். பாடல், காமெடி இல்லாமல் முழுமையான ஹாரர் அனுபவத்தை தரும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக சதீஷ் மனோஹரன் பணியாற்றுகிறார். ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பு செய்ய ஹர்ஷவர்த்தன் ராமேஷ்வர் இசையமைக்கிறார். பாம்பூ ட்ரீஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பாக ஜீவிதா கிஷோர் தயாரிக்கிறார். அறிமுக இயக்குநர் நம்பிக்கை சந்துரு இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்துள்ளது. மற்றொரு பிக்பாஸ் போட்டியாளரான ரேஷ்மாவுன் இந்தப் படத்தில் நடிக்கிறார். இவரோடு ரமா, ஸ்ருதி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இன்று ஒரே நாளில் 8 படங்கள் தியேட்டரில் ரிலீஸ்: கொரோனாவுக்கு பின் அதிக திரைப்படங்கள்!

மட்டி

இந்தியாவில் முதன்முதலில் பிரமாண்ட அளவில் ஆறு மொழிப் படமாக உருவாகியிருக்கிறது 'மட்டி ' (Muddy) திரைப்படம். இந்தியாவின் முதன்முதலாக கரடுமுரடான மண் சாலைப் பந்தயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் டாக்டர் பிரகபல் இயக்கி உள்ளார்.  பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் இப்படத்தைத்  தயாரித்துள்ளது.குடும்பம், பகை,  பழிவாங்கல் ,ஆக்ஷன் திகில் என்று பல  வண்ணங்களில் இப்படக்கதை சுற்றிச் சுழலும். கே ஜி.எப் 'படத்திற்கு இசை அமைத்த ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கே.ஜி.ரதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'ராட்சசன்' படப்புகழ் சான் லோகேஷ்  எடிட்டிங் செய்திருக்கிறார். 'புலி முருகன் ' புகழ்  ஆர்.பி.பாலா  இப்படத்திற்குத் தமிழில் வசனம் எழுதி இருக்கிறார். யுவன் கிருஷ்ணா, ரிதன் , அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆண்டி இந்தியன்:

யூடியூப்பில் பிரபல சினிமா விமர்சகராக வலம் வரும் ப்ளூ சட்டை மாறன், ’ஆண்டி இந்தியன்’ படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். ’ஆடுகளம்’ நரேன், ராதாரவி உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள். ஆதம் பாவா தயாரிப்பில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். இந்த திரைப்படம் சென்சாரில் பல பிரச்சனைகளுக்கு பிறகு யூ/ஏ சான்றிதழுடன் இன்று வெளியாகிறது. எல்லா திரைப்படங்களையும் வருத்தெடுத்த ப்ளூ சட்டை மாறனின் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று காண ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பட துறையினர் பலர் ஆர்வத்துடன் உள்ளனர்.

ஊமை செந்நாய்:

அறிமுக இயக்குநர் அர்ஜூன் ஏகலைவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஊமை செந்நாய், படம் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது. படத்தில் கதாநாயகனாக மைக்கேல் தங்கதுரையும் பிக்பாஸ் புகழ் சனம் ஷெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படம் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது. படத்திற்கு சிவா இசையமைத்துள்ளார். படத்தை லைஃப் கோஸ் ஆன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.இந்த திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் வெளியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் 8 படங்கள் தியேட்டரில் ரிலீஸ்: கொரோனாவுக்கு பின் அதிக திரைப்படங்கள்!

உத்ரா:

இந்தப் படத்தை ரேகா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எம்.சக்கரவர்த்தி தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் கதையின் நாயகியான ‘உத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் நடிகை ரக்‌ஷா நடிக்கிறார். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். அம்மன் வேடத்தில்  நடிகை கெளசல்யா நடித்திருக்கிறார். மற்றும் பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். தயாரிப்பு – எம்.சக்கரவர்த்தி, திரைக்கதை, இயக்கம் – நவீன் கிருஷ்ணா, இசை – சாய்தேவ், ஒளிப்பதிவு – ரமேஷ், வசனம் – குமார், படத் தொகுப்பு – எஸ்.பி.அஹமது, சண்டை இயக்கம் – கில்லி சேகர், நடன இயக்கம் – ராதிகா ஆகியோர் இந்த திரைப்படத்தில் பணி புரிந்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
ISRO 100th Mission: போடு வெடிய..! புத்தாண்டில் சம்பவம், இஸ்ரோவின் 100வது திட்டம் - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்
ISRO 100th Mission: போடு வெடிய..! புத்தாண்டில் சம்பவம், இஸ்ரோவின் 100வது திட்டம் - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்
ITR Filing: போச்சா..! ரூ.5,000 அபராதமா? வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு, காலக்கெடு நீட்டிப்பு
ITR Filing: போச்சா..! ரூ.5,000 அபராதமா? வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு, காலக்கெடு நீட்டிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan KalyanNehru Issue | ”நேருவையே தப்பா பேசுறியா” STANDUP COMEDIAN-க்கு ஆப்பு! கடும் கோபத்தில் காங்கிரஸ்!TTF Vasan  Issue : Snake Babu அவதாரம்.. சிக்கலில் சிக்கிய டிடிஃஎப்!  POLICE விசாரணையில் திடுக்!TVK Bus stand issue | ’’ஏய்…ஆளுங்கட்சியா நீ! யாரை கேட்டு கை வச்சீங்க?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
ISRO 100th Mission: போடு வெடிய..! புத்தாண்டில் சம்பவம், இஸ்ரோவின் 100வது திட்டம் - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்
ISRO 100th Mission: போடு வெடிய..! புத்தாண்டில் சம்பவம், இஸ்ரோவின் 100வது திட்டம் - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்
ITR Filing: போச்சா..! ரூ.5,000 அபராதமா? வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு, காலக்கெடு நீட்டிப்பு
ITR Filing: போச்சா..! ரூ.5,000 அபராதமா? வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு, காலக்கெடு நீட்டிப்பு
IND vs AUS:
IND vs AUS: "கண்டா வரச் சொல்லுங்க" சிட்னியில் சிங்க முகம் காட்டுவார்களா ரோகித் - விராட்? ஏங்கும் ரசிகர்கள்!
Breaking News LIVE: புத்தாண்டின் முதல் நாளே தங்கம் விலை உயர்வு
Breaking News LIVE: புத்தாண்டின் முதல் நாளே தங்கம் விலை உயர்வு
Happy New Year 2025:
Happy New Year 2025: "இனி உச்சம்தான்" பிறந்தது புத்தாண்டு! ஆடிப்பாடி ஆனந்தமாய் வரவேற்ற மக்கள்!
New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்
New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்
Embed widget