VJ Chithra : சூடுபிடிக்கும் VJ சித்ரா தற்கொலை வழக்கு.. கணவர் ஹேம்நாத்திடம் மீண்டும் விசாரிக்கும் போலீஸ்
தேவைப்பட்டால் சித்ராவின் பெற்றோரிடமும் விசாரிப்போம் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.
நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவரிடம் மீண்டும் விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதனால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
சமீபத்தில், சித்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அரசியல்வாதி ஒருவருக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் ஹேம்நாத் குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹேம்நாத், "சித்ராவின் மரணத்தில் அரசியல்வாதியின் தொடர்பு இருப்பதாகவும், அவரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும்" தெரிவித்தார். மேலும், இது குறித்து காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அவர் அளித்திருக்கிறார். இதனால், சித்ரா மரண வழக்கில் பல மர்மங்கள் இருப்பதாக பல தரப்பினரும், யூ ட்யூப் சேனல்களிடம் தெரிவிக்க ஆரம்பித்தனர்
சித்ராவின் மரணத்துடன் தொடர்புடைய அரசியல்வாதியின் பெயரை வெளியிட மறுத்த ஹேம்நாத், தகவலை மற்றும் பகிர்ந்தார். இது சம்பந்தமாக வேறு ஏதேனும் தகவலை வெளியே சொன்னால், தனது உயிருக்கு பாதிப்பு இருக்கும் என தெரிவித்திருந்தார். இதனால், காவல் துறையினர் தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும், சித்ராவின் மரணத்தை லாபநோக்காக பார்க்க நினைக்கும் மாஃபியா கும்பலை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
சூடுபிடிக்கும் நடிகை சித்ரா வழக்கு - சிக்கும் முன்னாள் அதிமுக எம்எல்ஏ..? பச்சைக்கொடி காட்டுமா அரசு?
இதனிடையே, வழக்கை திசை திருப்ப ஹேம்நாத் நாடகம் ஆடுகிறார் என்றும், தனது மகள் தற்கொலை வழக்கில் அரசியல்வாதிகள் இருக்கின்றனர் என போலீசார்தான் விசாரணை செய்ய வேண்டும் எனவும் சித்ராவின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், ஹேம்நாத் கூறுவதுபோல சித்ரா தற்கொலைக்கு தூண்டிய அரசியல்வாதிகள் யார் என்றும், அதற்கான ஆதாரங்களை திரட்ட வேண்டிய நிலையில் போலீஸார் இருப்பதால், ஹேம்நாத்திடம் மீண்டும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். தேவைப்பட்டால் சித்ராவின் பெற்றோரிடமும் விசாரிப்போம் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.
முன்னதாக, நடிகை சித்ரா தற்கொலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் விவகாரத்தில் மறு விசாரணை நடத்த எந்த பிரச்னையும் இல்லை என்றும், மடியில் கனம் இல்லை, அதனால் வழியில் பயம் இல்லை எனவும் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உண்மையான குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்