மேலும் அறிய

அரியலூர் : பாலியல் வன்கொடுமை வழக்கில் வாலிபருக்கு 11 ஆண்டுகள் சிறை - மகிளா கோர்ட்டு தீர்ப்பு

திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் மகிளா கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு .

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 23). இவர் இளம் பெண் ஒருவரை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ந் தேதி அந்த பெண்ணின் சகோதரிக்கு குழந்தை பிறந்ததால் அவரது பெற்றோர் அந்த பெண்ணை வீட்டில் விட்டுவிட்டு மருத்துவமனைக்கு சென்றனர். காதலியின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த ஆனந்தராஜ் அவரது வீட்டிற்குள் சென்று இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அந்த இளம்பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து வந்த ஆனந்தராஜ் அவரை திருமணம் செய்யவும் மறுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண் ஆனந்தராஜின் பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அந்த இளம்பெண்ணை ஏற்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் இருவீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் கடந்த 2019-ம் ஆண்டு ஆனந்தராஜை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கின் விசாரணை அரியலூரில் உள்ள மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
 
அரியலூர் : பாலியல் வன்கொடுமை வழக்கில்  வாலிபருக்கு 11 ஆண்டுகள் சிறை -  மகிளா கோர்ட்டு தீர்ப்பு
 
மேலும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் குற்றவாளி ஆன்ந்தராஜுக்கு வன்கொடுமை செய்ததற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், நம்ப வைத்து ஏமாற்றியதற்காக ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் வழங்கி தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் ராஜா ஆஜராகி வாதாடினார். இதனைதொடர்ந்து குற்றவாளி ஆனந்தராஜை போலீசார் பலத்த பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs USA: மீண்டும் கலக்கிய இந்திய பந்துவீச்சாளர்கள்.. 20 ஓவரில் 110 ரன்கள் மட்டுமே எடுத்த அமெரிக்க அணி..!
மீண்டும் கலக்கிய இந்திய பந்துவீச்சாளர்கள்.. 20 ஓவரில் 110 ரன்கள் மட்டுமே எடுத்த அமெரிக்க அணி..!
The GOAT: விஜய்யின் தி கோட் பட தொலைக்காட்சி உரிமையை தட்டித்தூக்கிய பிரபல சேனல்.. இத்தனை கோடிகளா!
The GOAT: விஜய்யின் தி கோட் பட தொலைக்காட்சி உரிமையை தட்டித்தூக்கிய பிரபல சேனல்.. இத்தனை கோடிகளா!
அதிமுகவுடன் அமமுக இணையவே இணையாது... பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் திட்டவட்டம்
அதிமுகவுடன் அமமுக இணையவே இணையாது... பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் திட்டவட்டம்
Prabhas: பிரபாஸ் ஒரு சோம்பேறி... திருமணம் செய்யாதது குறித்து இயக்குநர் ராஜமெளலி பகிர்ந்த ரகசியம்
Prabhas: பிரபாஸ் ஒரு சோம்பேறி... திருமணம் செய்யாதது குறித்து இயக்குநர் ராஜமெளலி பகிர்ந்த ரகசியம்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

MK Stalin | 40 ஜெயிச்சா போதுமா? ஓட்டு வங்கியில் ஓட்டை!கலக்கத்தில் உ.பிக்கள்!Kanimozhi : உதய்-க்காக கனிமொழிக்கு பதவியா? கலைஞர் பாணியில் ஸ்டாலின்! பின்னணி என்ன?Amitshah Warning to Tamilisai : மேடையிலேயே  தமிழிசையை கண்டித்த அமித்ஷா? பாஜக உட்கட்சி பூசல்Annamalai Vs Tamilisai : ”தலைமைக்கு கட்டுப்படனும்” பாஜக போட்ட ORDER! பதறிய அ.மலை, தமிழிசை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs USA: மீண்டும் கலக்கிய இந்திய பந்துவீச்சாளர்கள்.. 20 ஓவரில் 110 ரன்கள் மட்டுமே எடுத்த அமெரிக்க அணி..!
மீண்டும் கலக்கிய இந்திய பந்துவீச்சாளர்கள்.. 20 ஓவரில் 110 ரன்கள் மட்டுமே எடுத்த அமெரிக்க அணி..!
The GOAT: விஜய்யின் தி கோட் பட தொலைக்காட்சி உரிமையை தட்டித்தூக்கிய பிரபல சேனல்.. இத்தனை கோடிகளா!
The GOAT: விஜய்யின் தி கோட் பட தொலைக்காட்சி உரிமையை தட்டித்தூக்கிய பிரபல சேனல்.. இத்தனை கோடிகளா!
அதிமுகவுடன் அமமுக இணையவே இணையாது... பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் திட்டவட்டம்
அதிமுகவுடன் அமமுக இணையவே இணையாது... பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் திட்டவட்டம்
Prabhas: பிரபாஸ் ஒரு சோம்பேறி... திருமணம் செய்யாதது குறித்து இயக்குநர் ராஜமெளலி பகிர்ந்த ரகசியம்
Prabhas: பிரபாஸ் ஒரு சோம்பேறி... திருமணம் செய்யாதது குறித்து இயக்குநர் ராஜமெளலி பகிர்ந்த ரகசியம்
Pawan Kalyan: சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் பவர் ஸ்டாரான பவன் கல்யாண்: தோல்வி முதல் வெற்றி பயணம் வரை
Pawan Kalyan: சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் பவர் ஸ்டாரான பவன் கல்யாண்: தோல்வி முதல் வெற்றி பயணம் வரை
கொடைக்கானல் நட்சத்திர ஏரிக்குள் பறந்த கார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாலிபர்கள்
கொடைக்கானல் நட்சத்திர ஏரிக்குள் பறந்த கார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாலிபர்கள்
Watch Video: நடுவர் கொடுத்த மோசமான தீர்ப்பு! ஃபிஃபா உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் இருந்து வெளியேறிய இந்தியா..!
நடுவர் கொடுத்த மோசமான தீர்ப்பு! ஃபிஃபா உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் இருந்து வெளியேறிய இந்தியா..!
T20 World Cup 2024: நியூயார்க்கில் இந்திய அணி சந்தித்த பெரிய சிக்கல்.. பிசிசிஐ உதவியால் தப்பித்த ரோஹித் படை..!
நியூயார்க்கில் இந்திய அணி சந்தித்த பெரிய சிக்கல்.. பிசிசிஐ உதவியால் தப்பித்த ரோஹித் படை..!
Embed widget