Cyber Crime : சைபர் கிரைம் பிடியில் சிக்கும் புதுவை; ஆன்லைன் பங்குச்சந்தையில் ரூ.73 லட்சம் மோசடி... திணறும் போலீஸ்
புதுச்சேரியில் ஆன்லைன் பங்குச்சந்தையில் முதலீடு செய்து, 2 பேர் 73 லட்சத்தை இழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

புதுச்சேரி : புதுச்சேரியில் ஆன்லைன் பங்குச்சந்தையில் முதலீடு செய்து, 2 பேர் 73 லட்சத்தை இழந்துள்ளனர். ரெட்டியார்பாளையம், காவேரி நகரை சேர்ந்தவர் சுரேஜ் பாபு. இவரை தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், பகுதி நேர வேலையாக ஆன்லைன் பங்கு டிரேடிங் முதலீடு செய்தால், அதிக லாபத்துடன் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார்.
இதையும் படிங்க: Swami Vivekananda: ”விவேகானந்தர் கனவு இதுதான்”: இதை நிறைவேற்ற உறுதியேற்றுள்ளோம்- பிரதமர் மோடி
இதை நம்பி சுரேஷ்பாபு 66 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தார். அதற்கான லாபத் தொகையாக 4 கோடியே 50 லட்சம் ரூபாய் காட்டியுள்ளது. அந்த பணத்தை எடுக்க முயன்ற போது அவரால் எடுக்க முடியவில்லை. அதன்பின், அந்த மர்ம நபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகே ஆன்லைன் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது அவருக்கு தெரியவந்தது.
இதே போல், அரும்பார்த்தபுரம் பகுதியில் வசந்தம் நகரை சேர்ந்த பரணிதரன் என்பவர் பகுதி நேர வேலையாக ஆன்லைன் பங்குச்சந்தையில் ரூ. 6 லட்சத்து 84 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்தார். இருவரும் பங்கு சந்தையில் முதலீடு செய்து, 72 லட்சத்து 99 ஆயிரம் பணத்தை இழந்துள்ளனர். இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Jallikattu : நாட்டின மாடுகளை காப்பாற்ற இப்படியொரு முயற்சியா... இளைஞரின் புது ஐடியா
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ஆன்லைன் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என, மர்மநபர்கள் தொடர்பு கொண்டு ஆசைவார்த்தை கூறினால், அதனை நம்பி யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். பொதுமக்கள் ஆன்லைன் பங்குசந்தையில் முதலீடு செய்து லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருவது தொடர்கதையாக உள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற ஆன்லைன் மோசடி கும்பலிடம் விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இளைஞர்களுக்கான சைபர் விழிப்புணர்வு:
- உங்களைப் பாதுகாத்துக்கொள்வது போலவே உங்கள் ஆன்லைன் இருப்பையும் பாதுகாக்கவும்: உங்கள் சமூக ஊடகக் கணக்குகளில் சரியான அமைப்புகளைத் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், இடுகையிடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உங்களுக்குத் தெரியாமல் மற்றவர்கள் பார்க்கலாம், பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
- சமூக ஊடகங்களில் சரியான தனியுரிமை அமைப்புகள் மற்றும் உள்ளடக்க பகிர்வு வடிப்பான்களைத் தேர்ந்தெடுக்கவும், இதன் மூலம் உங்கள் தகவல், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உங்களின் நம்பகமானவர்களுடன் மட்டுமே பகிர்வீர்கள்.
- சமூக ஊடகங்களில் அந்நியர்களின் நண்பர் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதில் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருங்கள்
- உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒருவரை எவ்வாறு தடுப்பது என்பதை அறிக
- உங்கள் நண்பர்கள் பட்டியலில் இருந்து ஒருவரை எப்படி அகற்றுவது என்பதை அறிக
- பயன்பாட்டிற்குப் பிறகு சமூக ஊடக வலைத்தளங்களிலிருந்து வெளியேற நினைவில் கொள்ளுங்கள்
- கடவுச்சொல் மூலம் உங்கள் தொலைபேசியைப் பாதுகாக்கவும்
- உங்கள் போலி கணக்கு உருவாக்கப்பட்டிருப்பதை நீங்கள் கவனித்தால், உடனடியாக சமூக ஊடக சேவை வழங்குநரிடம் தெரிவிக்கலாம், இதனால் கணக்கைத் தடுக்கலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

