Swami Vivekananda: ”விவேகானந்தர் கனவு இதுதான்”: இதை நிறைவேற்ற உறுதியேற்றுள்ளோம்- பிரதமர் மோடி
Swami Vivekananda Birthday: விவேகானந்தர் பிறந்த தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள், அவரை நினைவுகூர்ந்தனர்.

சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி:
விவேகானந்தர் 1863 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் நாள் கல்கத்தாவில் பிறந்தார். இவர் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாவார். இந்நிலையில், இன்று இவரது பிறந்தநாள் என்பதால், பலரும் அவரது நினைவுகளையும், அவரது தத்துவங்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். மேலும், தலைவர்கள் பலரும் , அவரது உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தியும் வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு:
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்ததாவது, சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளில் அவருக்கு எனது பணிவான அஞ்சலியை செலுத்துகிறேன். சுவாமிஜி இந்தியாவின் மாபெரும் ஆன்மீகச் செய்தியை மேற்கத்திய உலகிற்கு எடுத்துச் சென்றார். இந்திய மக்களிடையே ஒரு புதிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தினார். சுவாமிஜி இளைஞர்களை தங்கள் திறனை வெளிக்கொணரவும், தேசத்தைக் கட்டியெழுப்பவும், மனித குலத்திற்கு சேவை செய்யவும் தூண்டினார். அவரது மரபு உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
I pay my humble tributes to Swami Vivekananda on his birth anniversary. Swamiji took the great spiritual message of India to the Western world. He infused a new self-confidence among the people of India. Swamiji inspired the youth to unleash their potential, work towards…
— President of India (@rashtrapatibhvn) January 12, 2025
Also Read: Pongal Holidays: போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் தினம்: எந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?
பிரதமர் மோடி:
இந்நிலையில், பிரதமர் மோடி விவேகானந்தர் குறித்து தெரிவித்ததாவது, “ சுவாமி விவேகானந்தர் இளைஞர்களுக்கு என்றென்றும் உத்வேகம் அளிக்கிறார். "சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இளைஞர்களுக்கு எல்லா காலங்களிலும் அவர் உத்வேகம் அளிக்கிறார். அவர் இளம் மனங்களில் ஆர்வத்தையும் நோக்கத்தையும் தொடர்ந்து தூண்டுகிறார். வலிமையான, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற அவரது கனவை நிறைவேற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்." என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Paying homage to Swami Vivekananda on his Jayanti. An eternal inspiration for youth, he continues to ignite passion and purpose in young minds. We are committed to fulfilling his vision of a strong and developed India. pic.twitter.com/ldTPWCW1aM
— Narendra Modi (@narendramodi) January 12, 2025





















