Today's stock market: இன்றைய பங்குச்சந்தை எப்படி இருக்கும்? எதில் முதலீடு செய்யலாம்?
"சில நாட்களாக தொடர்ந்து வந்த முன்னேற்றம் இன்றும் தொடரலாம், எஃப்ஐஐகளின் ஓட்டங்களில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும், மற்றும் உலகளாவிய சந்தைகள் இறக்கத்தை சந்திக்கும்"
பங்குச்சந்தையில் கடந்த ஆறு நாட்களாக உயர்வை சந்தித்து வந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி நேற்று சரிவை சந்தித்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) மிகப்பெரிய சரிவை சந்தித்த நிலையில், 30-பங்குகள் கொண்ட மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 306 புள்ளிகள் சரிந்து 55766.22 ஆக இருந்தது. NSE நிஃப்டி 0.5% சரிந்து 16631 ஆக நிலை பெற்றது, அதில் 31 பங்குகள் சரிவோடு முடிந்தன.
நேற்றைய சந்தை
நேற்றைய சந்தை கடந்த ஆறு நாட்களை போல இல்லாவிட்டாலும், சில சிறிய, மற்றும் மிட் ஸ்டாக்குகள் உயர்வை சந்தித்தன. ஒட்டுமொத்த சந்தையில், பிஎஸ்இ ஸ்மால்கேப் கேஜ் 0.13% சரிந்தது. திங்கட்கிழமை முடிவில் மிட்கேப் குறியீடு 0.03% உயர்ந்திருந்தது. நிஃப்டி மெட்டல் இன்டெக்ஸ் நல்ல முன்னேற்றத்தை கண்டிருந்தது. கடந்த ஒன்றரை மாதத்தில், நேற்று அதிகபட்சமாக 1.5% உயர்ந்தது. அதனால் இந்த திங்கட்கிழமை ஏற்ற இறக்கங்களுடனே காணப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்: Gold Rate Today 26,July: தங்கம் விலை சற்று உயர்வு..! எவ்வளவு தெரியுமா?
6 நாள் தொடர் முன்னேற்றம்
"நிஃப்டி கடந்த சில நாட்களாக சந்தித்த முன்னேற்றம், மீண்டும் கீழே இறங்கியுள்ளது. மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதென்பது நேற்றைய ஒட்டுமொத்த க்ராஃப்பை பார்க்கும்போது தெரிகிறது. இருப்பினும், இந்த நாளின் இடைவெளியில் 16700 புள்ளிகளை தொட்டுவிட்டு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் தொழில்நுட்ப ஆராய்ச்சி ஆய்வாளர் நாகராஜ் ஷெட்டி கூறினார். அதன் படி இன்றைய பங்கு சந்தையின் இடையே பெரும் மாற்றங்களை சந்தித்து மீண்டும் அதே புள்ளிகளை சுற்றி முடியும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இன்று எப்படி இருக்கும்?
வார இறுதியில் வந்த சில பெருநிறுவங்களின் சரிவு, சந்தையை கலவையான முடிவுகளுக்கு எடுத்துச் சென்றதை அடுத்து, உள்நாட்டு பங்குச்சந்தைகள் இடையிடையே தடுமாற்றத்தை சந்தித்தன. உலகளாவிய முன்னணியில், US Fed மீட்டிங் மற்றும் US Q2 GDP தரவு ஆகியவை கவனிக்க வேண்டிய முக்கிய நிகழ்வுகளாக இருக்கும். சில நாட்களாக தொடர்ந்து வந்த முன்னேற்றம் இன்றும் தொடரலாம், எஃப்ஐஐகளின் ஓட்டங்களில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும், மற்றும் உலகளாவிய சந்தைகள் இறக்கத்தை சந்திக்கும்", என்று சில்லறை ஆராய்ச்சியின் தலைவர் மோதிலால் ஓஸ்வால் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்