மேலும் அறிய

தமிழர் சமயம் என்றால் என்ன? விளக்குகிறார் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார்

தமிழர் சமயம் குறித்து பல்வேறு தரவுகளை ABP நாடு டிஜிட்டல் தளத்திற்கு தெளிவாக தனது பார்வையை விளக்குகிறார் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார். இதோ அவரது பார்வை...

தமிழர் சமயம் எது ? அதற்கான சான்றுகள் என்ன ? என்பதை பற்றி விளக்குகிறார் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார்

தமிழர் சமயம் என்றால் என்ன?  விளக்குகிறார் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார்

உலகத்தில் தோன்றிய முதல் மொழி தமிழ்மொழி என்று பல தரவுகள் சான்று கூறுகின்றன. மொழி அறிஞர்கள் மட்டுமன்று, பல துறை அறிஞர்களும் இதுவே உண்மை என்று பலபட சான்றுகள் அளிக்கின்றனர்.

அவற்றிற்கெல்லாம் மேலாக “செந்தமிழ் ஆதி தெளிந்து வழிபடு” என்கிறார் திருமூலர். இறைவனே முத்தமிழ் ஓசையாக இருக்கின்றான் என்றும் திருமூலர் கூறுகின்றார். “முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை என்பது அவரது வாக்கு. விஞ்ஞானிகளே உலகியல் துறைகளில் உயர்ந்த சான்றாகக் கொள்ளத் தக்கவர்கள். அவர்களும் தமிழே முதல் மொழி என்கின்றனர். விஞ்ஞானிகளுக்கும் அகப்படாத அண்ட வெளி உண்மைகளுக்கு அருளாளர்களே முடிந்த முடிபான சான்று. தமிழைப் பொறுத்தவரை இவ்விரு சான்றுகளும் இன்தமிழுக்கே ஆதரவாக உள்ளன.

எனவே தமிழர் சமயமே உலகின் முதல் சமயமாக இருக்க வேண்டும். சமயம் என்பது என்ன? அண்டவெளியில் ஒரு பகுதியாக உள்ள இந்நிலவுலகில் மனிதன் வாழ்க்கை எப்படி இருந்தால் அதன் முழுப்பயன் அடைய முடியும் என்று வாழ்நெறிகளை சமைத்துக் கொடுப்பது; அமைத்துக் கொடுப்பது. அதற்கு அகிலத்தையும் அண்ட வெளியையும் ஆய்தல் வேண்டும்.

நல்லவேளை! மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் அனைத்துமே ஆய்வறிவுடையவை. மனிதனிடத்தில் ஆய்வறிவு என்பது மற்ற உயிரினங்களை விட அபாரமாக மேம்பட்டு அதன் திண்மையால் ஆறாம் அறிவு என்ற ஒன்று அடையாளம் காணப்படுகிறது.

இறைவன் ஒரு முறை தாயுமானவருக்குக் காட்சி அளித்தானாம். அப்போது “என் அன்பனே!” என்று தாயுமானவரை அழைக்கவில்லையாம்! “ஆராயும் அறிவே!” என்று அழைத்தானாம்!

‘‘பாராதி பூதம் நீயல்லை உன்னிப்

பார் இந்திரியம் கரணம் நீயல்லை

ஆராய் உணர்வு நீ என்றான் – ஐயன்

அன்பாய் உரைத்தசொல் ஆனந்தம் தோழி’’

தமிழர் சமயம் என்றால் என்ன?  விளக்குகிறார் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார்

இந்த ஆராயும் உணர்வுடன் முதல் மனிதன் ஆன தமிழன் அகிலத்தையும், அண்டவெளியையும் ஆராய்கின்றான். இந்த உலகம் எப்படி வந்தது? இதில் நான் எப்படி வந்தேன்? நான் யார்? எதற்காக வந்தேன்? என்ன செய்வதற்காக வந்தேன்? புறப்பட்ட இடம் எது? போகின்ற இடம் எது? இவை போன்ற பல கேள்விகளால் மூளையைத் துளைத்தான்; முட்டும் சூழலைத் துளைத்தான்; முற்றுமாக அண்டத்தையே துளைத்தான். இதற்கு பெயர் தான் எபிஸ்டமாலஜி (Epistemology) என்று ஆங்கிலம் கூறும். தமிழில் மெய்ப்பொருளாய்வு என்று கூறலாம்.

ஒரு மைக்ராஸ்கோப் உண்டா? ஒரு டெலஸ்கோப் உண்டா? எதுவும் இல்லாமல் இது என்ன ஆய்வு? பாவம் குழந்தை! என்ன செய்யும் ? என்று இறைவன் காலத்தையும், இடத்தையும் கடந்தும் ஆய்ந்தறியக்கூடிய நெற்றிக்கண் பார்வையை முதல் மனிதனான தமிழனுக்கு இயல்பாகவே தூண்டிவிட்டான். அது எல்லோருக்கும் உள்ளது; ஆனால் முயற்சியால் பெறத்தக்கது. இதைத்தான் இறைவன் பரிவுடன் குருவாகத் தூண்டிச் செயல்படுத்தினான். இதை இன்று விஞ்ஞானம் எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்சன் (Extra Sensory Perception) என்றும், க்ளேர்வாயன்ஸ் (Clairvoyance) என்றும் கூறுகிறது.   

இந்த நெற்றிக்கண் தமிழர்களுக்கு இருந்தது என்று ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாய்வில் மண்டையோட்டை ஆய்ந்த தகவல்கள் இந்திய தொல்லியல் துறையினால் வெளியாயின. இது 19-11-2005 ஆம் நாளிட்ட தினத்தந்தி நாளேடு உள்ளிட்டப் பல நாளேடுகளில் வெளியிடப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே முதற்சலுகையாக முதல் மனிதனான தமிழனிடம் இறைவனால் தூண்டப்பட்ட நெற்றிக்கண் பார்வையினால் அகிலத்தையும், அண்டவெளியையும், அதில் தன் இருப்பும், அது எதற்காக, என்ன செய்தால் இதன் முழுப்பயனை பெறலாம் என்பதையெல்லாம் கண்டறியப்பட்டு உலகிற்கு உதவியது தான் தமிழர் சமயம்!

இதையெல்லாம் உள்ளடக்கியே மணிவாசகர், “தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!” என்று பாடினார்.

தமிழர் சமயம் என்றால் என்ன?  விளக்குகிறார் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார்

அதாவது உலகின் தென்கோடியான குமரிக் கண்டம் என்று தமிழராலும், லெமூரியா என்று நிலநூல் வல்ல விஞ்ஞானிகளாலும் கூறப்படும் தென்பகுதியில் முதல் மனிதனாக தமிழனுக்கு ஒரு வாய்ப்பாகக் கிடைத்த இறையறிவே போற்றி என்றும், அந்த இறைவனே உலகில் எந்நாட்டவர்க்கும் இறைவன் ஆதலால் அவனுக்குப் போற்றி! அந்த சிவனுக்கு போற்றி என்பதே அந்த அருந்தமிழ் வாக்கின் பொருள்!

இறைவனைத் தமிழ் இனம் உட்பட எந்த ஓர் இனமும் தனக்கே உரிய்வன் என்று கொண்டாடுவது பேதைமை! எல்லா இனத்திற்கும் பொதுவான இறைப் பொருளை உலகின் தென்பகுதியில் தோன்றிய முதல் மனிதன் உணர்ந்தான். அவனே அண்டமனைத்திற்கும் பொது இறை! என்று உலகிற்கு அறிவிப்பதே அந்த தமிழ் வாக்கு. அதனால் தான் தமிழ் நாட்டுத் தில்லைக் கோயிலுக்குப் பொது என்று பெயர். அந்த இறை ஆடும் நடத்திற்குப் பொது நடம் என்று பெயர்.

இறைவன் பொது; காரணம் அவன் ஒரே ஒருவன்; ஒரே ஒருவனாகத்தான் இருக்க முடியும் என்பது தமிழர் கண்ட முடிபு. அவன் தானே முதலில் பார்த்தவன். எனவே “ஒன்றே குலம்; ஒருவனே தேவன்!” என்று அதை ஆவணப்படுத்தினார் திருமூலர்.

தமிழர் சமயம் என்றால் என்ன?  விளக்குகிறார் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார்

ஆனால் மனிதர்கள் பலராயிற்றே! பலகோடி ஆயிற்றே! எல்லோருக்கும் தனித்தனியே ஒரு குணம் உண்டு. அது சூழலால் அடித்து பிசைந்து சமைக்கப்படுவது. சூழல் என்பது இடத்தைக் குறிப்பதால் எல்லா இடத்திலும், எல்லா தட்பவெட்ப நிலையிலும் உள்ள மனிதர்கள் ஒரே மாதிரியாக நினைக்க வேண்டுவதில்லை, நினைக்கவும் முடியாது.

அதனால் ஒவ்வொரு வகை நிலத்தவரும் அந்த ஒரே இறைவனை அவரவர்க்கு உகந்த உருவில் கண்டனர். அதில் தவறும் இல்லை. இறைவனும் அந்தந்த உருவில் அவர்கட்கு அருள் புரிந்தான். எந்த உருவிலும் வர்த்தக்க ஆற்றல் உடையன் தானே இறைவன்! அதனால் தான்,

“ஆர்உருவம் உள்குவார் உள்ளத்துள்ளே

        அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்”

என்று அப்பர் அடிகள் பாடினார். எந்த உருவிலோ வணங்கிக் கொள்! ஆனால் இறைவன் ஒருவனே! அவனை மறவாதே! என்பது தான் தமிழரின் முடிந்த முடிபு. இதையே பட்டினத்தார் “ஒன்றென்றிரு! தெய்வம் உண்டென்றிரு!” என்று பாடினார்.

இந்த அடிப்படையில் தான் தமிழரின், ஏன்? உலகத்திற்கே தொன்மையான இலக்கணமான தொல்காப்பியத்தில் உலக நிலவகைகள் நான்கைக் கூறி, ஒவ்வொன்றிலும் அந்த ஒரே கருப்பொருளான இறைவனை இப்படி இப்படி தமிழர்கள் வணங்கினர் என்று தொல்காப்பியர் பதிவு செய்தார்.

'மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.

என்பது தொல்காப்பியம். இதன் பொருளாவது: முல்லை நிலத்தவர் இறைவனை திருமாலாகவும், குறிஞ்சி நிலத்தவர் முருகனாகவும், மருத நிலத்தவர் வேந்தனாகவும், நெய்தல் நிலத்தவர் வருணனாகவும் வணங்கினர் என்பது பொருள். தமிழ்நாட்டில் கூறப்பட்ட இந்த நிலப்பாகுபாட்டிற்கு வேறாக உலகில் வேறு வகை நிலம் கூறமுடியாது. எனவே உலகில் ஒவ்வொரு நிலத்தவரும் இறைவனை ஒவ்வொரு வகையாக வணங்கலாம் என்பது தமிழர் சமயம் மனிதமனம் அறிந்து கூறும் அற்புத முடிபு! இதை ஆங்கிலவர் Cosmopolitanism என்பர். உலகம் தழுவிய பார்வை என்று பொருள்.

இறைவனுக்கு ஏது பெயர் என்று கேட்டதும் தமிழர் சமயம்! பலர் இருந்தால் அடையாளம் காட்ட பெயர் தேவைப்படும். ஒரேயொரு இறைவனுக்கு ஏது பெயர் எஙிறது தமிழர் சமயம். தமிழ் இலக்கியங்களில் சிவனது அடையாளங்கள் எல்லாம் வரும். அவை அனைத்தும் கடவுள் இலக்கண அடையாளங்கள் “பிறவாயாக்கை பெரியோன்”, “நீலமணி மிடற்றோன்”, “விரிசடைக் கடவுள்” என்றெல்லாம் வரும். ஆனால் ஓரிடத்தில்  கூட சிவன் என்று பெயர் வராது.

ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமில்லாற் காயிரந்

திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ.

என்பது திருவாசக வாக்கு. கடவுள் வாழ்த்து பாடிய திருவள்ளுவர் தமிழர் கொள்கைப்படியே அந்த அதிகாரத்தில் ஓரிடத்தில் கூட கடவுள் பெயர் இது என்று கூறாததும் கவனிக்கத் தக்கது.

தமிழர் சமயம் என்றால் என்ன?  விளக்குகிறார் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார்

ஆமாம், கடவுளின் இலக்கணங்கள் என்ன? அதையாவது சொல்லலாமே என்றால் அதைப் பிழிந்து கொடுத்தது தான் தமிழரின் சைவ சித்தாந்தம். ஜி.யு.போப் அவர்களின் மேற்கோள் ஒன்றே தமிழரின் சமயமான சைவ சித்தாந்தத்திற்கு மணிமுடி:

“Saiva Sidhdhantha is the choicest product of Dravidian Intellect”

அந்தப் பேரின்பக்கடலில் மூழ்கி மொண்டும் உண்டும் முத்தெடுத்து உற்றறிக! அதுவே தமிழர் சமயம்.

என்கிறார் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Rain: உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Rain: உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Embed widget