TN Cabinet Reshuffle: முதல்வர் ஸ்டாலின் மங்காத்தா கேம் ஸ்டார்ட்..4 பேர் உள்ளே, 2 பேர் வெளியே!
CM Stalin Reshuffles Tamil Nadu Cabinet: தமிழ்நாட்டின் அமைச்சராக மீண்டும் மனோ தங்கராஜ் பதவியேற்றுள்ளார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழ்நாட்டின் அமைச்சரவை பதவியிலிருந்து செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் ராஜினாமா செய்த நிலையில், மனோ தங்கராஜ் அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு தமிழ்நாட்டின் ஆளுநர் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், அமைச்சராக பொறுப்பேற்ற மனோ தங்கராஜ்-க்கு பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே இந்த பதவிதான் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவையில் மாற்றம் செய்த முதல்லவர் ஸ்டாலின்:
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றத்தை கொண்டுவருவதற்கான பரிந்துரையை முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநருக்கு பரிந்துரை செய்தார். அதில் செந்தில் பாலாஜி, பொன்முடி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் வனத்துறை மற்றும் காதித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோரின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் ஆளுநர் மாளிகை அறிவித்தது. மேலும், மனோ தங்கராஜ் அமைச்சரவையில் சேர்க்கப்படுவதற்கான பரிந்துரையை ஏற்பதாகவும் ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
4 பேர் உள்ளே, 2 பேர் வெளியே:
இந்நிலையில் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகிய 2 பேர் ராஜினாமா செய்த நிலையில், அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், முத்துசாமி மற்றும் ராஜகண்ணப்பன் ஆகிய 3 பேருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படுவதாகவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
1.வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரான எஸ்.முத்துசாமி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையை கூடுதலாக கவனித்துக் கொள்வார்.
2.போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கும் எஸ்.எஸ்.சிவசங்கர், மின்சாரத்துறையை கூடுதலாக கவனித்துக் கொள்வார்
3.ராஜகண்ணப்பன் வனத்துறை மற்றும் காதித்துறைக்கான கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார் என்றும் ஆளுநர் மாளிகை வெளியிட்ட குறிப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
4.இந்நிலையில், இன்று எம்.எல்.ஏ மனோ தங்கராஜ் அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு தமிழ்நாட்டின் ஆளுநர் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், அமைச்சராக பொறுப்பேற்ற மனோ தங்கராஜ்-க்கு பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே இந்த பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ministers S.S. Sivasankar, S. Muthusamy, and R.S. Raja Kannappan, assigned new portfolios after V. Senthil Balaji and K. Ponmudy resigned, met CM M.K. Stalin ahead of their April 28 swearing-in. T. Mano Thangaraj, reinstated to the Cabinet, also met the CM. @xpresstn pic.twitter.com/3xnwEVrrs4
— Ezhilarasan (@ezhil_jkm) April 27, 2025
முதல்வர் ஸ்டாலின் மங்காத்தா கேம் ஸ்டார்ட்:
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இப்பொழுதே தேர்தல் தொடர்பான பேச்சுக்கள் தீவிரமாகியுள்ளன. இந்நிலையில், இலவச கட்டண மகளிர் பேருந்து முதல் சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்து சர்ச்சை கருத்து வரை என தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களால் முதல்வர் ஸ்டாலினுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி வந்தார் பொன்முடி. இந்நிலையில், மூத்த உறுப்பினர் என்றும் பாராமல் அமைச்சரவையில் இருந்து விலக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளார் ஸ்டாலின்.
மேலும், அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்த செந்தில்பாலாஜி , அதிமுகவில் இருக்கும் போது பணம் வாங்கி வேலை வாங்கி வருவதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில், சிறைக்குச் சென்று ஜாமீனில் வெளியே வந்தார். ஜாமீனில் வெளியே வந்ததும் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், அமைச்சர் பதவியா அல்லது சிறையா என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்த நிலையில், அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், தேர்தல் நெருங்கும் நிலையில் தேவையின்றி கட்சிக்கு அவப்பெயரை தவிர்க்கும் வகையில் பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி ஆகிய இருவரின் பதவியையும் எஸ்.முத்துசாமி, எஸ்.எஸ்.சிவசங்கர்,ராஜகண்ணப்பன் மற்றும் மனோ தங்கராஜ் ஆகிய 4 பேருக்கு மாற்றி அமைத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.





















