Padma Awards 2025: 'பத்ம ஸ்ரீ’ விருது பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின்! விருது விழா ஹைலைட்ஸ்!
Padma Awards 2025: டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று (28.04.2025)நடைபெற்றது

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பத்ம ஸ்ரீ விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
பத்ம விருதுகள்
2025-ம் ஆண்டிற்கான இந்தியாவின் உயரிய விருதுகளான பதம் ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் மொத்தம் 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. பத்ம விபூஷன் விருது 7 நபர்களுக்கும் , பத்ம பூச விருது 19 நபர்களுக்கும், பத்ம ஸ்ரீ விருது 113 நபர்களுக்கும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரத்தை காணலாம்.
பத்ம பூஷண் விருது:
- நல்லி குப்புசாமி - தொழில் துறை
- நடிகர் அஜித் குமார்- தமிழ் சினிமா (கலை)
- சோபனா சந்திரகுமார் - தமிழ் சினிமா (கலை)
பத்ம ஸ்ரீ விருது:
- குருவாயூர் துரை (கலை)
- கே.தாமோதரன் (சமையல் கலை)
- லட்சுமிபதி ராமசுப்பையர் (இலக்கியம் - கல்வி - இதழியல்)
- எம்.டி.ஸ்ரீனிவாஸ் (அறிவியல் - பொறியியல்)
- புரசை கண்ணப்ப சம்பந்தன் (கலை)
- ரவிச்சந்திரன் அஸ்வின் (விளையாட்டு - கிரிக்கெட்)
- ஆர். ஜி. சந்திரமோகன் - (தொழில்துறை)
- ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி (கலை)
- ஸ்ரீனி விஸ்வநாதன் (இலக்கியம் - கல்வி)
- வேலு ஆசான் (கலை, பறை இசை)
President Droupadi Murmu confers Padma Vibhushan in the field of Literature and Education on Shri M. T. Vasudevan Nair (Posthumous). He was a cultural icon whose work had profound influence on several generations of readers, and continues to do so. He was a writer, film director,… pic.twitter.com/IVmiLKVQps
— President of India (@rashtrapatibhvn) April 28, 2025
பதம் விருதுகள் வழங்கும் விழா
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று (28.04.2025)நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் இருந்து விருதைப் பெற்றுக்கொண்டனர்.
பத்ம ஸ்ரீ விருது பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின்
விளையாட்டு துறையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.
VIDEO | Cricketer Ravichandran Ashwin (@ashwinravi99) conferred with the Pad
— Press Trust of India (@PTI_News) April 28, 2025
a Shri Award by President Droupadi Murmu in Delhi.
(Source: Third party)
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/ZUDp9xUDBl
பத்ம விருது வழங்கும் விழாவில், அஸ்வின் மனைவி ப்ரீத்தி, அஸ்வின் பெற்றோர் பங்கேற்றனர்.
சமையல் கலைஞர் தாமு

சமையல் கலை நிபுணர் தாமோதரன் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடமிருந்து விருதைப் பெற்றுக்கொண்டார்.




















