Sovereign Gold Bond Scheme: அடடே..! கிராமிற்கு ரூ.9,600 , 109 சதவிகிதம் வருவாய் - தங்கப் பத்திரங்கள் மீது ஆர்பிஐ அறிவிப்பு
Sovereign Gold Bond Scheme: கடந்த 2020-21 நிதியாண்டில் தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்தவர்கள் முன்கூட்டியே அவற்றை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது.

Sovereign Gold Bond Scheme: கடந்த 2020-21 நிதியாண்டில் தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்தவர்களுக்கு, ஒரு யூனிட்டிற்கு ரூ.9,600 வழங்கப்படும் என அறிவித்தது.
தங்கப் பத்திரம் முதலீடு - அடித்தது ஜாக்பாட்
ஆபரண தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து 9 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது. இதனால் தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணமே கனவாகி வருகிறது. குறிப்பாக நடுத்தர மக்களின் சிறந்த முதலீட்டு வாய்ப்பாக இருந்த தங்கம், தற்போது எட்டாக்கனியாக மாறியுள்ளது. இந்நிலையில் தான் ரிசர்வ் வங்கி அட்டகாசமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தங்கப்பத்திரங்களில் முதலீடு செய்தவர்களுக்கு 108 சதவிகிதம் வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமுக்கு ரூ.9,600 அறிவிப்பு
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கடந்த 2020-21 ஆம் நிதியாண்டில் முதல் சீரிஸாக வெளியிடப்பட்ட சவரன் தங்கப் பத்திர (SGB) திட்டத்திற்கான முன்கூட்டியே திரும்பப் பெறும் விலையை அறிவித்துள்ளது. அதில் இந்தியா புல்லியன் அண்ட் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் லிமிடெட் (IBJA) வெளியிட்டுள்ளபடி, கடந்த ஏப்ரல் 23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளுக்கு முந்தைய மூன்று வணிக நாட்களுக்கு 999 தூய்மையான தங்கத்தின் சராசரி இறுதி விலையின் அடிப்படையில், முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கான விலை ஒரு யூனிட்டுக்கு அதாவது ஒரு கிராமிற்கு 9,600 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. SGB திட்டம் 2020-21- தொடர் 1 பகுதி 38 இன் மீட்பு விலை, இந்த திட்டத்தை ஆன்லைனில் வாங்கிய முதலீட்டாளர்களுக்கான ரூ.4,589 வெளியீட்டுடன் ஒப்பிடும்போது லாபம் 109% அதிகமாகும்.
முன்கூட்டியே திரும்பப் பெறும் வாய்ப்பு:
வழக்கமாக தங்கப் பத்திரங்களின் முதிர்வு காலல் 8 ஆண்டுகள் ஆகும். ஆனால், இந்த முறை 5 ஆண்டுகள் முடிவிலேயே பத்திரத்தை திரும்பச் செலுத்தி பணத்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை ரிசர்வ் வங்கி வழங்கிyaது. அதன்படி, கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி விநியோகிக்கப்பட்ட பத்திரங்களுக்கான முதிர்வு காலம் நேற்று அதாவது ஏப்ரல் 28ம் தேதி நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. SGBகள் என்பவை தங்கம் அடிப்படையிலான அரசாங்கப் பத்திரங்கள் ஆகும், இவை முதலீட்டாளர்களுக்கு முதிர்ச்சியின் போது தங்கத்தின் சந்தை-இணைக்கப்பட்ட மதிப்பையும், 2.5% உறுதி செய்யப்பட்ட வருடாந்திர வட்டியையும் வழங்குகிறது. இந்த வட்டித் தொகை 6 மாதங்களுக்கு ஒருமுறை உங்கள் கணக்கில் செலுத்தப்படும்.
நேற்று வழங்கப்பட்ட முன்கூட்டியே திரும்பப் பெறும் வாய்ப்பைத் தவறவிட்டவர்கள் கவலை கொள்ள வேண்டாம். காரனம் இந்தப் பத்திரம் 8 வருட முதிர்வு காலம் வரை ஆண்டுதோறும் நிலையான 2.5% வட்டியைப் பெற்றுத் தரும். அதோடு, முதலீட்டாளர்கள் இரண்டாம் நிலை சந்தையில் பத்திரங்களை தற்போதைய சந்தை விலையில் விற்கலாம்.
நிறுத்தப்பட்ட தங்கப் பத்திரங்கள்:
முன்னதாக, கடந்த பிப்ரவரியில் வெளியான மத்திய அரசின் பட்ஜெட்டில் இனி புதியதாக தங்கப்பத்திரங்கள் விநியோகிக்கப்படாது என அறிவிக்கப்பட்டது. அதேநேரம், ஏற்கனவே விநியோகிக்கப்பட்ட தங்கப் பத்திரங்கள் தொடர்ந்து செல்லுபடியாகும். முன்கூட்டியே முதிர்ச்சி அடைவது அல்லது 8 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. நடுத்தர மக்களின் நல்ல சேமிப்பு வாய்ப்பாக இருந்த, தங்கப் பத்திரத்தை நிறுத்தியது அரசின் ஒரு மோசமான முடிவாகவே கருதப்படுகிறது.





















