பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் கன்னட நடிகர்?
விஜய் சேதுபதி, இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில், இணைந்துள்ள நடிகர் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இயக்குநர் பூரி ஜெகன்னாத்- 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் புதிய பான் இந்திய திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை கவர தயாராகி வருகிறார். பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கவுர் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை தபு ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து தற்போது இந்தத் திரைப்படத்தில் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய்குமார் இணைந்திருக்கிறார். 'வீர சிம்ஹா ரெட்டி' படத்திற்கு பின்னர் விஜயகுமார் நடிக்கும் படம் இது. இவர் திரை தோற்றத்திலும் .. தரமான நடிப்பிலும் பெயர் பெற்றவர் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விஜய் சேதுபதி அவருடைய திரையுலக பயணத்தில் புதிய தளத்தை உருவாக்கும் வகையில் துணிச்சலான வேடத்தில் நடிக்கிறார். ஒரு சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தின் மூலம் நடிகை தபு மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நடிக்கிறார். இவர்களுடன் விஜய் குமார் இணைந்து நடிக்கவிருக்கிறார். கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான இவர் .. தன்னுடைய புதிய தோற்றத்தில் நடிக்கிறார். மேலும் விஜயகுமார், விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகார பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
அதிரடி ஆக்சன் டிராமாவாகவும், உணர்வுபூர்வமான காட்சிகளைக் கொண்ட துடிப்பான படைப்பாகவும் இந்த படம் உருவாகி உள்ளது. இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படைப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.





















