Padma awards 2025: ரஜினி ஸ்டைலில் எண்ட்ரி! பத்ம விருது விழாவில் மாஸ் காட்டி பாலைய்யா.. வைரலாகும் வீடியோ
Padma awards 2025: பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் பாலய்யா தனக்கே உரிய பாணியில் கலந்து கொண்டார் பாலய்யா.

டோலிவுட்டின் மூத்த ஹீரோக்களில் ஒருவரான பாலகிருஷ்ணா, கடந்த 50 ஆண்டுகளாக தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறந்து வருகிறார். திரைப்படத் துறையிலும், அரசியல் துறையிலும், சமூக சேவைகளிலும் அவர் ஆற்றிய சிறப்பான சேவைகளைப் பாராட்டி அவருக்கு 'பத்ம பூஷண்' விருது வழங்கப்பட்டது. பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் பாலய்யா தனக்கே உரிய பாணியில் கலந்து கொண்டார் பாலய்யா.
#WATCH | Actor and Andhra Pradesh MLA Nandamuri Balakrishna receives Padma Bhushan award from President Droupadi Murmu for his contribution to the field of Art.
— ANI (@ANI) April 28, 2025
(Video Source: President of India/YouTube) pic.twitter.com/YAHohendso
டெல்லியில் தெலுங்கு கலாச்சாரத்தை பெருமையுடன் வெளிப்படுத்தும் பாரம்பரிய பஞ்சே கட்டு அணிந்திருந்த பாலகிருஷ்ணா காணப்பட்டார்.நாயகனும் எம்.எல்.ஏ.வுமான நந்தமுரி பாலகிருஷ்ணா, தனது குடும்பத்தினருடன், பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள ராஷ்டிரபதி பவனுக்கு வருகை தந்தார், அங்கு அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
Proud moment for ballaya fans and Telugu speaking to receive prestigious honour award from madam President @rashtrapatibhvn
— Harsha (@paruchuri777) April 28, 2025
❤️❤️pic.twitter.com/6MoVTJ3y3Q
இந்தியாவின் மிக உயர்ந்த குடிமை விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், ஆண்டுதோறும் இந்தியக் குடியரசுத் தலைவரால் ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் ஒரு சடங்கு விழாவில் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு, கலை, இலக்கியம் மற்றும் பொது சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த தனிநபர்களை விருதுகள் அங்கீகரித்தன.
Congratulations Ballaya#JaiBalayyapic.twitter.com/YQiUAAhlWv
— Ajith Paltan (@Ajithkumar_3112) April 28, 2025
நந்தமுரி பாலகிருஷ்ணா தற்போது போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் 'அகண்ட 2: தாண்டவம்' படத்தில் நடித்து வருகிறார் . இது 'அகண்டா' படத்தின் தொடர்ச்சி. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது படப்பிடிப்பு நிலையில் உள்ள இந்தப் படம், இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது. விருது வென்ற பாலைய்யாவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்






















