சரவணன் மீனாட்சி மிர்ச்சி செந்திகுக்கு ஜோடியாகும் சன் டிவி ஹீரோயின்! வெளியான புதிய அறிவிப்பு!
சரவணன் மீனாட்சி புகழ் மிர்ச்சி செந்தில் வெப் சீரிஸ் ஒன்றின் மூலமாக மீண்டும் கம்பேக் கொடுக்கிறார். ஏற்கனவே அவர் அண்ணா சீரியலில் நடித்து வரும் நிலையில் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் நடிகர் மிர்ச்சி செந்தில். ரேடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கையை தொடங்கிய மிர்ச்சி செந்தில், தவமாய் தவமிருந்து படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தில் சேரன் மற்றும் ராஜ்கிரண் தான் முன்னணி ரோலில் நடித்திருந்தன்ர். அவர்களுடன் இணைந்து மிர்ச்சி செந்தில் நடித்திருந்தார்.
இந்தப் படத்திற்கு பிறகு எவனோ ஒருவன், சென்னை – 600028, கண் பேசும் வார்த்தைகள், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், பப்பாளி, வெண்ணிலா வீடு, ரொம்ப நல்லவன் டா நீ, சூரரை போற்று என்று பல படங்களி நடித்துள்ளார். அவர் சினிமாவில் நடித்து கிடைக்காத வரவேற்பு சீரியலுக்கு கிடைத்தது.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீசன் 1 என்ற சீரியல் மூலமாக பிரபமானார். இந்த சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த, மலையாள சீரியல் நடிகை ஸ்ரீஜா சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து மாப்பிள்ளை, கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை (வெப் சீரிஸ்), கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை சீரிஸ் 2 (வெப் சீரிஸ்), கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை சீரிஸ் 3 (வெப் சீரிஸ்) ஆகியவற்றில் இணைந்து நடித்துள்ளார்.

மிர்ச்சி செந்திலும் நாம் இருவர் நமக்கு இருவர், சீதா ராமன் (சிறப்பு தோற்றம்) ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். தற்போது ஜீ தமிழில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் 'அண்ணா' சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான், நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்திருக்கிறார். ஜியோ ஹாட் ஸ்டாரில் இந்த தொடர் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது. இந்த வெப் சீரிஸில் அவருக்கு ஜோடியாக செம்பருத்தி சீரியலில் பிரபலமான ஷபானா நடித்துள்ளார். இந்த வெப் தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.





















