Jyothika: 73 வயது நடிகருக்கு ஓகே.. ஆனால் 64 வயது நடிகருக்கு ஜோடி போட முடியாதுனு சொன்ன ஜோதிகா!
63 வயது சூப்பர் ஸ்டார் நடிகருடன் நடிகை ஜோடிகா நடிக்க மறுத்த தகவலும் இதற்கான காரணமும் தற்போது வைரலாகி வருகிறது.

ஜோதிகா:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஜோதிகா. சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்னதாக இருவரும் இணைந்து ஜில்லுனு ஒரு காதல், காக்க காக்க, மாயவி, பேரழகன், பூவெல்லாம் கேட்டுப்பார், ஜூன் 6, உயிரிலே கலந்தது என்று பல படங்களில் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பின்னர், பல இளம் ஸ்டார் ஜோடிகளுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறார்கள். இவர்களின் காதலுக்கு அடையாளமாக தியா மற்றும் தேவ் என்று ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். திருமணம் ஆகி குழந்தைகள் பிறந்து வளரும் வரை சினிமாவிலிருந்து விலகியிருந்த ஜோதிகா, குழந்தைகள் நன்கு வளர்ந்த பின்னர் '36 வயதினிலே' என்ற படம் மூலமாக மீண்டும் எண்ட்ரி கொடுத்தார்.

ஜோதிகாவின் படங்கள்:
இந்தப் படத்திற்கு பிறகு மகளிர் மட்டும், நாச்சியார், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பே, சைத்தான் என்று பல படங்களில் நடித்தார். பின்னர் கடந்த ஆண்டு, பாலிவுட் பட வாய்ப்புகளுக்காகவும், தன்னுடைய குழந்தைகள் படிப்பையும் கருத்தில் கொண்டு, சென்னையில் இருந்து மும்பையில் குடும்பத்தோடு குடியேறினார்.
வெப் சிரீஸ்:
தற்போது பாலிவுட் படங்களிலும், வெப் சிரீஸ்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தான் இந்த வாரம் மோகன் லாலின் நடிப்பில் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்று வரும் 'துடரும்' என்ற படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மோகன் லாலுக்கு ஜோடியாக ஜோதிகாவை தான் நடிக்க வைக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

மோகன் லால் ஜோடியாக நடிக்க மறுத்த ஜோதிகா:
அதுமட்டுமின்றி இயக்குநர் தருணிடம், சூர்யா மற்றும் ஜோதிகா இருவருமே சேர்ந்து தான் கதையை கேட்டிருக்கிறார்கள். மேலும் கதையும் இருவருக்கும் பிடித்திருந்தாலும், இயக்குநர் கால்ஷீட் கேட்ட அதே தேதிகளில் இருவரும் உலக சுற்றுலா செல்ல திட்டமிட்டதால்... இந்த படத்தில் தன்னால் நடிக்க முடியாது என ஜோதிகா திட்டவட்டமாக கூறி இருக்கிறார். அதன் பின்னரே இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஜோதிகாவுக்கு சென்றிருக்கிறது. ஏற்கனவே இவர் கடந்த ஆண்டு 73 வயது நடிகர் மம்மூட்டிக்கு ஜோடியாக காதல் தி கோர் படத்தில் நடித்த நிலையில், மோகன் லாலை மட்டும் சில காரணங்கள் கூறி நிராகரித்தது ஏன்? என மலையாள ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.





















