தென் மாநிலங்களில் இந்தி கற்க ஆர்வமாக உள்ளனர் - பாஜக மத்திய இணையமைச்சர்
Hindi Language: தென் மாநிலங்களில் உள்ள புதிய தலைமுறையினர் இந்தி மொழியை கற்க ஆர்வத்துடன் உள்ளனர் என மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து, மத்திய அரசுக்கும் மாநிலங்களின் அரசுக்கும், குறிப்பாக தென் மாநிலங்களின் அரசுகளுக்கும் இடையிலான மிகப் பெரிய தொடர் மோதல் போக்காக இந்தி மொழி பிரச்னை இருந்து வருகிறது. தற்போது புதிய கல்விக் கொள்கை வழியாக இந்தி மொழி மறைமுகமாக திணிக்கப்படும் என கூறி தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக எதிர்த்து வருகிறது. மேலும், சமீபத்தில் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இந்தி மொழி திணிக்கப்படுவதாக கூறி எதிர்ப்புகள் வருவதையும் செய்திகளாக பார்க்க முடிகிறது. இந்நிலையில், இந்தி மொழியை அரசுத் துறைகளில் ஊக்குவிப்பது சில அரசாங்கத் துறைகளின் பொறுப்பு மட்டுமே அல்ல, அது சமூகத்தின் பகிரப்பட்ட பொறுப்பு என்று மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
Also Read: Rafale: 26 ரஃபேல் போர் விமானங்களை இறக்கும் இந்தியா...பிரான்சிடம் ரூ.63,000 கோடிக்கு ஒப்பந்தம்!
பணியாளர் நலன், பொது மக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதிய அமைச்சகம் இந்தி மொழியை ஊக்குவிப்பது தொடர்பாக ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் பேசிய மத்திய இணையமைச்ச ஜிதேந்திர சிங், இந்தி பயன்பாட்டை விரிவுபடுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், தொடர்ச்சியான முயற்சிகள் அவசியம்.
Also Read: முதல்வர் ஸ்டாலின் மங்காத்தா கேம் ஸ்டார்ட்..4 பேர் உள்ளே, 2 பேர் வெளியே!
இந்தி குறித்த சமூக அணுகுமுறையை மாற்றுவது அதைப் பரந்த அளவில் ஏற்றுக் கொள்வதற்கு முக்கியமானதாகும். தற்போது தென் மாநிலங்களில் புதிய தலைமுறையினர், அரசியல் சூழல்களைப் பொருட்படுத்தாமல், இந்தி மொழியைக் கற்க அதிக ஆர்வமாக உள்ளனர்.
கல்வி நிறுவனங்களில் இந்திப் பயன்பாட்டை வலுப்படுத்த புதுமையான வழிகள் தேவை. ஆலோசனைக் குழு உறுப்பினர்களின் ஆலோசனைகளை வரவேற்ற இணையமைச்சர் ஜிதேந்திர சிங், அவர்களின் கருத்துகள் எதிர்கால உத்திகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.
Also Read: இபிஎஸ்,ஸ்டாலின் காரசார விவாதம்: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் போலி என்கவுண்டரா?





















