மேலும் அறிய
Rasi Palan Today, Oct 14: சிம்மத்துக்கு சுபம் ; கன்னிக்கு தெளிவு - உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today, October 14: அக்டோபர் மாதம் 14ஆம் நாள் திங்கள் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.

ராசிபலன்
Source : twitter
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today October 14, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். ஆடம்பரமான செலவுகள் மூலம் விரயங்கள் உண்டாகும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். நீண்ட நாள் சந்திக்க நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். உயர் அதிகாரிகளிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் சாதகமான முடிவுகள் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
ரிஷப ராசி
வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மருத்துவ துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதம் விலகும். காப்பீடு துறைகளில் உள்ளவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். எதிலும் விழிப்புணர்வுடன் இருக்கவும். உதவி கிடைக்கும் நாள்.
மிதுன ராசி
கமிஷன் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். வாகனம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். உறவினர்களின் வகையில் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். அலைச்சல் நிறைந்த நாள்.
கடக ராசி
முயற்சிக்கு உண்டான மதிப்பு கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பயனற்ற செயல்களை குறைத்துக் கொள்ளவும். தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். மனதை கட்டுப்பாடுடன் வைத்திருக்கவும். சிறு மற்றும் குறு தொழிலில் விவேகம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் உண்டாகும். திடீர் செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
சிம்ம ராசி
மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூல பலன்கள் கிடைக்கும். வெளியூர் பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். தொழிலில் சிறு சிறு மாற்றங்கள் மூலம் சாதகமான வாய்ப்புகள் அமையும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். குழப்பம் மறையும் நாள்.
கன்னி ராசி
நீண்ட நாட்களாக மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். நண்பர்களின் வட்டாரம் விரிவடையும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்குவீர்கள். பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.
துலாம் ராசி
வியாபார விஷயங்களில் நிதானத்துடன் முடிவெடுப்பது நல்லது. குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வியாபாரப் பணிகளில் அலைச்சல் இருந்தாலும் லாபமும், அனுபவமும் கிடைக்கும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பாசம் நிறைந்த நாள்.
விருச்சிக ராசி
புதிய வீடு மற்றும் மனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்களுடன் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பூர்வீகம் சம்பந்தமான சுபவிரயங்கள் செய்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு மேலான பொறுப்புகள் கிடைக்கும். தொலைபேசி தொடர்பான செய்திகளின் மூலம் பயணங்களை மேற்கொள்வீர்கள். வரவுகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.
தனுசு ராசி
நினைத்த பணிகளில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு பணிகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகப் பணிகளில் சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நம்பிக்கை மேம்படும் நாள்.
மகர ராசி
குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரிய விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய வாகனங்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். பரிவு வேண்டிய நாள்.
கும்ப ராசி
வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளின் தயக்கமும், காலதாமதமும் நேரிடும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சுக்கள் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். சிந்தனைப்போக்கில் கவனம் வேண்டும். வெற்றி நிறைந்த நாள்.
மீன ராசி
கலை சார்ந்த பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பிள்ளைகளின் திறமைகளை அறிவீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். ஆடம்பரமான பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் அலைச்சலுக்கு பின்பு சாதகமான முடிவுகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். சினம் விலகும் நாள்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement