Today Rasipalan, November 01: தொடங்கியாச்சு நவம்பர் மாதம்.. இந்த நாள் யாருக்கு லக்?.. இன்றைய ராசிபலன்கள் இதோ..!
Today Rasipalan November 01: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள் - 01.11.2023 (புதன் கிழமை)
நல்ல நேரம்:
காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை
மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை
இராகு:
நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை
குளிகை:
காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
எமகண்டம்:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் - வடக்கு
மேஷம்
குடும்ப உறுப்பினர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். எதிர்காலம் சார்ந்த சில பணிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் கைகூடிவரும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
ரிஷபம்
சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். பணி நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.
மிதுனம்
விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். வித்தியாசமான கற்பனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தனம் நிறைந்த நாள்.
கடகம்
தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். இலக்கியப் பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உத்தியோக மாற்றம் தொடர்பான விஷயங்களில் தெளிவு பிறக்கும். பரிசு நிறைந்த நாள்.
சிம்மம்
அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். உடன்பிறப்புகளிடம் அனுசரித்துச் செல்லவும். மனை சார்ந்த விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். கல்வி பணிகளில் ஆர்வம் ஏற்படும். வரவுகள் சாதகமாக இருக்கும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணைவருடன் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உதவி நிறைந்த நாள்.
கன்னி
எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். சிறு மற்றும் குறு தொழில் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில்நுட்ப தேடல் அதிகரிக்கும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். விவேகமான செயல்பாடுகள் முன்னேற்றத்தை உண்டாக்கும். போட்டி நிறைந்த நாள்.
துலாம்
தம்பதிகளுக்கிடையே அனுசரித்துச் செல்லவும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்த்துக் கொள்ளவும். மறதி தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். அரசு அதிகாரிகள் கவனத்துடன் செயல்படவும். தெளிவு வேண்டிய நாள்.
விருச்சிகம்
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தற்பெருமை சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. வர்த்தகம் தொடர்பான புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். முயற்சி மேம்படும் நாள்.
தனுசு
சமூகப் பணிகளில் மாற்றமான சில அனுபவங்கள் உண்டாகும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
மகரம்
அரசு பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துகளின் வழியில் மாற்றம் ஏற்படும். களிப்பு நிறைந்த நாள்.
கும்பம்
கல்வி தொடர்பான ஆலோசனைகளின் மூலம் தெளிவு பிறக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணம் தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். பாராட்டு நிறைந்த நாள்.
மீனம்
செயல்பாடுகளில் துரிதம் அதிகரிக்கும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். பத்திரம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். ஆதரவு நிறைந்த நாள்.