மேலும் அறிய

Today Rasipalan, December 18: கும்பத்துக்கு இன்பம்! தனுசுக்கு ஆதாயம்! உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan: டிசம்பர் 18ஆம் தேதியான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள் - 18.12.2023 - திங்கள் கிழமை

நல்ல நேரம்:

காலை 6.15 மணி முதல் காலை 7.15 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

இராகு:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

குளிகை:

பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை

எமகண்டம்:

காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

 தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். இரவு நேர பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

ரிஷபம்

சிறு வாய்ப்புகளிலும் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நெருக்கமானவர்களின் தேவைகளுக்காக சிலரின் உதவிகளை தேடுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். பாராட்டுகள் நிறைந்த நாள்.

மிதுனம்

குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். இழுபறியான சில வரவுகள் மீண்டும் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். சிரமம் குறையும் நாள்.

கடகம்

மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். சில முடிவுகளில் அனுபவம் கைகொடுக்கும். வியாபாரம் சார்ந்த ரகசியங்களில் கவனம் வேண்டும். புதிய துறைகளில் சிந்தித்துச் செயல்படவும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். பொறுமை வேண்டிய நாள்.

சிம்மம்

மனதளவில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். புதிய நபர்களின் அறிமுகம் மாற்றத்தை ஏற்படுத்தும். வேலையாட்களை நியமனம் செய்வதற்கான எண்ணங்கள் உண்டாகும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். நன்மை நிறைந்த நாள்.

கன்னி

மனதளவில் தெளிவு ஏற்படும். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். போட்டி விஷயத்தில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். சவாலான வேலைகளையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். உதவி நிறைந்த நாள்.

துலாம்

வாகன வசதிகள் மேம்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். புதிய தொழில் சார்ந்த தேடல் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிற்றின்பம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். ஆக்கம் நிறைந்த நாள்.

விருச்சிகம்:

உறவினர்களின் சந்திப்புகள் ஏற்படும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலைகள் உண்டாகும். மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். நலம் நிறைந்த நாள்.

தனுசு

மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். பூர்வீக பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் புதுவிதமான எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்கள் கருத்துகளுக்கான மதிப்பு மேம்படும். ஆதாயம் நிறைந்த நாள்.

மகரம்

தம்பதிகளுக்குள் மனம் விட்டு பேசுவது நல்லது. நவீன மின்னணு சாதனங்களில் கவனம் வேண்டும். பொருளாதாரம் குறித்த சில முடிவுகளை எடுப்பீர்கள். புதிய ஆடைகளில் ஆர்வம் ஏற்படும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் மீண்டும் கிடைக்கும். வியாபாரத்தில் உத்வேகம் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.

கும்பம்

இனம்புரியாத சில கவலைகள் தோன்றி மறையும். வீண் விவாதங்களில் தலையிட வேண்டாம். வாடிக்கையாளர்களிடத்தில் கனிவு வேண்டும். சக ஊழியர்களிடத்தில் பொறுத்து நடந்துகொள்வது நல்லது. மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். சூழ்நிலைகள் அறிந்து கருத்துகளை வெளிப்படுத்தவும். வழக்கு விஷயங்களில் சிந்தித்துச் செயல்பட வேண்டும். இன்பம் நிறைந்த நாள்.

மீனம்

குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் உழைப்பு அதிகரிக்கும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மனதில் தோன்றும். சக ஊழியர்களால் அமைதியின்மை ஏற்படும். நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். ஆடம்பரப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Starlink Internet Price: ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!Mohammed Shami controversy | ரமலான் நோன்பு.. அவமதித்தாரா முகமது ஷமி? இஸ்லாம் சொல்வது என்ன?Mayor Issue | “பொண்ணுனா கேவலமா போச்சா” கடலூர் மேயர் Vs அதிகாரிகள் மோதல் பின்ணனி என்ன? | Cuddalore

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Starlink Internet Price: ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
Jio SpaceX Deal: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
Chennai Car Parking Rules: ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
Embed widget