மேலும் அறிய

Today Rasipalan, November 13: ரிஷபத்துக்கு சுகம்...மேஷத்துக்கு நன்மை...உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan: இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள் - 13.11.2023 -  திங்கள் கிழமை

நல்ல நேரம்:

காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

இராகு:

காலை 7.30 மணி முதல் காலை 9.00  மணி வரை

குளிகை:

பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை

எமகண்டம்:

காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

தடைபட்ட செயல்களைச் செய்து முடிப்பீர்கள். கால்நடை தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். நண்பர்களுக்கிடையே புரிதல் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்

எதிர்வாதங்களைக் குறைத்துக் கொள்ளவும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். நெருக்கமானவர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். கடன் சார்ந்த சில உதவிகள் கிடைக்கும். வித்தியாசமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தம்பதிகளுக்கிடையே அனுசரித்துச் செல்வது நல்லது. வெளியூர் பயணங்களால் புதுவிதமான அனுபவம் ஏற்படலாம். சுகம் நிறைந்த நாள்.

மிதுனம்

நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். எதிர்பார்ப்புகளில் இருந்துவந்த தடைகள் விலகும். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். கற்பனை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். பாரம்பரியம் தொடர்பான தேடல் பிறக்கும்.  கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி தொடர்பான நெருக்கடிகள் குறையும். ஆதரவு நிறைந்த நாள்.

கடகம்

எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். கால்நடை வளர்ப்பு மூலம் ஆதாயம் அடைவீர்கள். பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். திடீர் செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். பக்தி நிறைந்த நாள்.

சிம்மம்

உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் ஏற்படும். தனவரவுகள் சாதகமாக இருக்கும். எதிர்ப்புகளினால் ஏற்பட்ட தாமதம் குறையும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் சாதகமாகும். வாகனம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். வரவு நிறைந்த நாள்.

கன்னி

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். தனவரவை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர் பாலின மக்களால் அனுகூலம் உண்டாகும். விருப்பமான உடைகளை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தனம் நிறைந்த நாள்.

துலாம்

குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்து பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். நிர்வாகத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு மனத் திருப்தியை ஏற்படுத்தும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் மேம்படும். ஊக்கம் நிறைந்த நாள்.

விருச்சிகம்

வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். வஞ்சனையான பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. கலை சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். மறைமுக செயல்களால் ஆதாயம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதைத் தவிர்க்கவும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.

தனுசு

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நினைவாற்றலில் இருந்துவந்த பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மேம்படும். நெருக்கமானவர்களால் சேமிப்பு குறையும். குழந்தைகளில் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

மகரம்

வியாபாரம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். தொழிலில் புதிய பாதைகள் புலப்படும். மூத்த சகோதரர் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.  உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். வாகனம் வாங்கும் எண்ணங்கள் நிறைவேறும். அரசுப் பணிகளில் ஆதாயம் உண்டாகும். திட்டமிட்ட சில பணிகள் பலிதமாகும். போட்டி நிறைந்த நாள்.

கும்பம்

குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. தனவரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். புதிய கலைகள் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தின் மூலம் நன்மை உண்டாகும். பாராட்டு நிறைந்த நாள்.

மீனம்

பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். இயந்திர துறைகளில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பயனற்ற வாக்குவாதங்களைக் குறைத்துக் கொள்ளவும். எண்ணிய பணிகளைச் செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget