மேலும் அறிய

Rasipalan December 11: தனுசுக்கு சஞ்சலம்... மகரத்துக்கு லாபம்.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவை தான்..!

RasiPalan Today December 11: இந்த நாள் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள்: 11.12.2022

நல்ல நேரம்:

காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை

மாலை 3.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை

கௌரி நல்ல நேரம்:

மதியம் 1.45 மணி முதல் மதியம் 2.45 மணி வரை

இராகு:

மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை

குளிகை:

மதியம் 6.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

எமகண்டம்:

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

சூலம் - மேற்கு

மேஷம்

ஆன்மிக பயணங்களை மேற்கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும்.மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.  எதிர்பார்த்த உயர் பதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிலும் நடுநிலையுடன் செயல்பட்டு ஆதரவுகளை உருவாக்கி கொள்வீர்கள். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும். புகழ் மேம்படும் நாள்.

ரிஷபம்

தனவரவில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். விருப்பமான உணவினை உண்டு மகிழ்வீர்கள்.  வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் சேமிப்பை மேம்படுத்துவீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். தானியம் தொடர்பான விற்பனையில் லாபம் மேம்படும். துணிவு நிறைந்த நாள்.

மிதுனம்

 வியாபார பணிகளில் பயணங்கள் கைகூடும். வாழ்க்கை துணைவரை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் தோன்றி மறையும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். உதவி கிடைக்கும் நாள்.

கடகம்

விடாமுயற்சியுடன் செயல்படுவதன் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.  எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

சிம்மம்

பங்கு வர்த்தகத்தில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் குழப்பம் தோன்றி மறையும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கலை சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வயதில் மூத்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வெற்றி நிறைந்த நாள்.

கன்னி

தொழில் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள். சொத்துக்களை அபிவிருத்தி செய்வது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். உடல் ஆரோக்கியம் தொடர்பான எண்ணங்கள் குறையும். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் கைகூடும். சமூக பணிகளில் ஒத்துழைப்பு மேம்படும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சிக்கல் குறையும் நாள்.

துலாம்

சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பாடுகளில் மாற்றங்களை செய்வீர்கள். போட்டி தேர்வுகளில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் எண்ணிய முடிவு கிடைக்கும். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

விருச்சிகம்

எதிர்பார்த்த தனவரவு காலதாமதமாக கிடைக்கும். இறை வழிபாடுகளின் மூலம் மனதில் அமைதி உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோக பணிகளில் பேச்சுக்களை குறைத்து செயல்பாடுகளில் கவனம் செலுத்தவும். சோதனை நிறைந்த நாள்.

தனுசு

வியாபாரப் பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.  கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.  சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் இழுபறியான சூழ்நிலைகள் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கும். கால்நடை சார்ந்த விஷயங்களில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சஞ்சலம் நிறைந்த நாள்.

மகரம்

சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.  வேலையாட்களின் ஆதரவு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டிகளில் இருந்துவந்த தயக்கங்கள் குறையும்.  காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சிலரின் வருகையால் மாற்றம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.

கும்பம்

பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். இறை வழிபாடு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உற்பத்தி சார்ந்த துறைகளில் லாபம் மேம்படும். குழந்தைகளுடன் பொழுதுகளை செலவு செய்து மனம் மகிழ்வீர்கள். தனவரவை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். நலம் நிறைந்த நாள்.

மீனம்

புதிய துறை சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். கட்டிடம் சார்ந்த துறைகளில் லாபம் மேம்படும். சொத்துக்களை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். தொழில் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். அரசு சார்ந்த துறைகளில் அதிகாரமும், பொறுப்பும் அதிகரிக்கும். உறவினர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். விவசாய பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சொந்த ஊர் செல்வது தொடர்பான பயணங்கள் கைகூடும்.  அமைதி நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
DMK Vs ADMK: மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை...
மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை... "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மேயருக்கு குழு குழு ரூம் தேவையா?" -அதிமுக ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமாEPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
DMK Vs ADMK: மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை...
மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை... "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மேயருக்கு குழு குழு ரூம் தேவையா?" -அதிமுக ஆவேசம்
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு:  எப்போது?
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு: எப்போது?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Embed widget