மேலும் அறிய

மக்காச்சோளம்... வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல்: விவசாயிகள் மகிழ்ச்சி

நாளுக்கு நாள் பெருகி வரும் இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்கான தேவையால் கால்நடை வளர்ப்பை அதிகரித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கோழிப்பண்ணைகளும் இறைச்சி, முட்டை உற்பத்தியை அதிகரித்து வருகின்றன.

தஞ்சாவூர்: தஞ்சை அருகே திருமலைசமுத்திரம் பகுதியில் மக்காச்சோளம் அறுவடை பணிகள் முடிந்து காயவைத்து விற்பனை செய்வதில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். மக்காச்சோளத்தை நேரடியாக வந்து வியாபாரிகள் வாங்கி செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் கடந்தாண்டை விட இந்தாண்டு சற்று விலை குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் முப்போகமும் நெல் சாகுபடி நடப்பது வழக்கம். குறுவை, சம்பா, தாளடி என்று விவசாயிகள் நெல் சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். வானம் பார்த்த பூமி பகுதியில் பம்ப் செட் வைத்துள்ள விவசாயிகள் கரும்பு, கடலை, மக்காச்சோளம் ஆகியவற்றை சாகுபடி செய்கின்றனர். 

இந்நிலையில் நாளுக்கு நாள் பெருகி வரும் இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்கான தேவையால் கால்நடை வளர்ப்பை அதிகரித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கோழிப்பண்ணைகளும் இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியை அதிகரித்து வருகின்றன. இதனால் அடர் தீவனங்களின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. அடர் தீவன உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளாக மக்காச்சோளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

இதனால் மக்காச்சோள சாகுபடியில் தஞ்சை பகுதியை சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் மேற்கொண்டு வருகின்றனர். முக்கியமாக மானாவரி பகுதியில் விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியை மேற்கொள்கின்றனர். காரணம் குறைந்த தண்ணீர், குறைவான பராமரிப்பு என்ற அளவில் மக்காச்சோள சாகுபடி விவசாயிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒருசில பகுதிகளில் நெல்லுக்கு மாற்றுப்பயிராக மக்காச்சோளம் சாகுபடியும் நடந்து வருகிறது. இதற்காக விற்பனையும் உடனே முடிந்து விடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
 
அந்த வகையில் தஞ்சை அருகே திருமலைசமுத்திரம் பகுதியில் மக்காச்சோளம் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டனர். தற்போது சோளக்கதிர்கள் முற்றி அறுவடை முடிந்துள்ளது. வயலில் அறுவடை செய்த சோளத்தை தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து இல்லாத இடத்தில் காய வைக்கும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அறுவடை செய்த மக்காச்சோளத்தை காய வைத்தவுடன் நேரடியாக அப்பகுதிக்கே வந்து பிற மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். கடந்த முறை சாகுபடியின் போது கிலோ ரூ.25க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது சோளம் கிலோ ரூ.23க்கு வாங்கி செல்கின்றனர். தற்போது சற்று விலை குறைந்திருந்தாலும் காத்திருந்து விற்பனை செய்வதற்கு அவசியமின்றி வியாபாரிகள் நேரடியாக வந்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்து உடனடியாக பணத்தை தந்து விடுகின்றனர்.

இதனால் அறுவடை முடிந்த ஓரிரு நாட்களிலேயே பணம் கிடைத்து விடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மக்காச்சோளத்தின் தேவையும் அதிகரித்துள்ளதால் விற்பனை விலையும் கூடுதலாகி உள்ளது. ஆனால் நிலையான விலை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், மக்காச்சோளம் அறுவடை முடிந்து காயவைக்கும் இடத்திலேயே வந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து விடுகின்றனர். ஆனால் நிலையான விலை இல்லாமல் அவ்வபோது ஏற்ற இறக்கமாக உள்ளது. இருப்பினும் உடனுக்குடன் பணம் கிடைத்து விடுகிறது. இதனால் செலவு போக நல்ல லாபம் கிடைக்கிறது என்று தெரிவித்தனர். தற்போது பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் மதிய நேரத்தில் சோளத்தை சாலையில் காய வைத்து மாலைக்குள் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இருப்பினும் வியாபாரிகள் நேரடியாக காய வைக்கும் இடத்திற்கே வந்து சோளத்தின் தரத்தை பார்த்து வாங்கி சென்று விடுகின்றனர் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi Speech: தொடர்ந்து 12வது முறையாக.. சுதந்திர தின உரை, பிரதமர் மோடி பேச்சில் ஆப்ரேஷன் சிந்தூர், ட்ரம்ப்?
PM Modi Speech: தொடர்ந்து 12வது முறையாக.. சுதந்திர தின உரை, பிரதமர் மோடி பேச்சில் ஆப்ரேஷன் சிந்தூர், ட்ரம்ப்?
Coolie Day 1 Collection: 100 கோடி ஜுஜுபி.. லியோ மட்டும் கஷ்டம் -  ரஜினியின் கூலி திரைப்பட முதல் நாள் வசூல் எவ்வளவு?
Coolie Day 1 Collection: 100 கோடி ஜுஜுபி.. லியோ மட்டும் கஷ்டம் - ரஜினியின் கூலி திரைப்பட முதல் நாள் வசூல் எவ்வளவு?
TN Govt Warning: போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP vs OPS | மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Speech: தொடர்ந்து 12வது முறையாக.. சுதந்திர தின உரை, பிரதமர் மோடி பேச்சில் ஆப்ரேஷன் சிந்தூர், ட்ரம்ப்?
PM Modi Speech: தொடர்ந்து 12வது முறையாக.. சுதந்திர தின உரை, பிரதமர் மோடி பேச்சில் ஆப்ரேஷன் சிந்தூர், ட்ரம்ப்?
Coolie Day 1 Collection: 100 கோடி ஜுஜுபி.. லியோ மட்டும் கஷ்டம் -  ரஜினியின் கூலி திரைப்பட முதல் நாள் வசூல் எவ்வளவு?
Coolie Day 1 Collection: 100 கோடி ஜுஜுபி.. லியோ மட்டும் கஷ்டம் - ரஜினியின் கூலி திரைப்பட முதல் நாள் வசூல் எவ்வளவு?
TN Govt Warning: போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
US Tariff Warning: “ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
“ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
TN TET 2025: ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
தமிழகத்தில் தற்கொலைகள் உச்சம்! பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு! அதிர்ச்சி தரும் ஆளுநர் உரை
தமிழகத்தில் தற்கொலைகள் உச்சம்! பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு! அதிர்ச்சி தரும் ஆளுநர் உரை
J&K Cloudburst: ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்; 38 பேர் பலி - மீட்புப் பணியில் இணைந்த ராணுவம்
ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்; 38 பேர் பலி - மீட்புப் பணியில் இணைந்த ராணுவம்
Embed widget