Donald Trump Shot : RIFLE உடன் வந்த இளைஞர்..மேடையில் நடந்தது என்ன? டிரம்ப் FIRST ரியாக்ஷன்!
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தாமஸ் மேத்யூ குரூக்ஸ் எனும் இருபது வயது இளைஞர் தான் என்று எப்.பி.ஐ கண்டறிந்துள்ளது.. இந்நிலையில் துப்பாக்கிச் சுற்றிற்கான காரணம் குறித்து முழு வீச்சில் விசாரணை நடைபெற்ற வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜோ பைடன், டொனால்ட் ட்ரம்ப் இருவரும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் அமெரிக்காவின் பென்சில் வேனியா மாகாணத்தில், பட்லர் நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த டிரம்ப், வழக்கமான தன்னுடைய பாணியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது, டிரம்பை நோக்கி தோட்டாக்கள் பாய்ந்தது. இதில் ட்ரம்பின் வலது காதில் துப்பாக்கி தோட்டா அடித்தது, உடனே அவர் தன்னுடைய காதை பிடித்துக் கொண்டு மேடையில் வைக்கப்பட்டிருந்த பொடியதிற்கு கீழே குனிந்தார், அடுத்த நொடியே ட்ரம்பை சுத்து போட்ட பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை சுட்டு வீழ்த்தினர்..
இந்நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு, முதல் முறையாக பேசியுள்ள டிரம்ப், பாதுகாப்பு அதிகாரிகளை பாராட்டியுள்ளார்.
டிரம்பை பாதுக்காப்பான இடத்திற்கு அழைத்துசெல்ல அதிகாரிகள் முயன்ற போது இருங்கள் முதலில் நான் என்னுடைய ஷூவை எடுத்துக்கொள்கிறேன் என்று தெரிவித்த டிரம்ப், அங்கே என்ன நடந்தது என்ன விவரித்துள்ளார்.
அதில் “நம்முடைய நாட்டில் இது போன்ற செயல் நடப்பதை நம்ப முடியவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்று இதுவரை தெரியவில்லை அவர் தற்போது இறந்து விட்டார். என்னை நோக்கி சுடப்பட்ட தோட்டா, என் காதில் மேல்பகுதியில் துளையிட்டு சென்றுவிட்டது. நான் பேசிக் கொண்டிருந்த போதே திடீரென எதுவோ ஒன்று சரியாக இல்லை என்று உணர்ந்தேன், காதுகளில் whissing சத்தம் கேட்டது உடனடியாக என்னுடைய தோலை கிழித்துக்கொண்டு தோட்டா செல்வதை உணர்ந்தேன். அதிகப்படியான ரத்தம் வழிந்தது அப்போதுதான் என்ன நடக்கிறது என்பதை புரிந்தது. அமெரிக்காவை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சுட்டது, 20 வயது இளைஞர் தாமஸ் மேத்யூ குரூக்ஸ் என்பதும், அவர் பென்சில்வேணியா மாகானத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. அத்தனை உயரமான இடத்திலிருந்து, அவர் எப்படி சுட்டார் என்று அதிகாரிகள் ஆச்சிரியத்தை வெளிபடுத்தியுள்ளனர்..
மேலும் சாதாரண டி ஷர்ட் அணிந்திருந்த அவர், 148 அடி தூரத்திலிருந்து டிரம்பை நோக்கி சுட்டுள்ளார். அந்த தூரம் என்பது, பாதுகாப்பு பெரிமீட்டருக்கு வெளியே என்பதால் தான், டிரம்பின் பாதுக்காப்பில் சொதப்பல் ஏற்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏனினும் சுட்டதற்கான காரணம் குறித்து தற்போது வரை தெளிவாக தெரிய வராத நிலையில், தீவிர விசாரணை நடைப்பெற்று வருகிறது.
இந்த சம்பவத்திற்கு தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ள பிரதமர் மோடி “எனது நண்பரும், முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதல் கவலையளிக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.
எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் மற்றும் அமெரிக்க மக்களுடன் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இன்னும் இரண்டு நாட்களில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கபட இருந்த நிலையில், இப்படி ஒரு சம்பவம் அறங்கேறியுள்ளது, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.