Kodaikanala Tourism | இப்போ தான் Mind Free யா இருக்கு..கொடைக்கானல் OPEN.. சுற்றுலா பயணிகள் உற்சாகம்!
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இந்த சுற்றுலா தலத்திற்கு பல்வேறு மாவட்டங்கள் , மாநிலங்களிலிருந்து அதிகமானோர் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தவிர்க்கும் விதமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் அனைத்து சுற்றுலா தலங்கள்,பூங்காக்கள்,படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தமிழக அரசு தடை விதித்தது இதனையடுத்து தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் இன்று முதல் பூங்காக்கள்,படகு குழாம்கள் செயல்பட தமிழக அரசு அறிவித்து இருந்தது
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரையண்ட் பூங்கா,ரோஜா பூங்கா,செட்டியார் பூங்காக்கள் இன்று முதல் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு அரசு வழிகாட்டுதலின் படி இன்று முதல் அனுமதிக்கப்படுகிறது ,பூங்காக்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும்,உடல் வெப்ப பரிசோதனை மேற்கொண்ட பிறகே பூங்காவின் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர் மேலும் சமூக இடைவெளியைகடை பிடிக்க வேண்டும் எனவும் பூங்காக்களுக்குள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் 200 ரூபாய் உடனடடி அபராத தொகை விதிக்கப்படவுள்ளதாகவும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கட்டுப்பாட்டில் உள்ள படகு குழாம்களுக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்கப்பட்டது இதனையடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் படகுசவாரி மேற்கொண்டும் பூங்காக்களில் உள்ள மலர்களை கண்டு ரசித்தும் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு படகு குழாம் மற்றும் பூங்காக்கள் திறக்கப்பட்டு உள்ளதால் அப்பகுதியில் கடை வைத்திருக்கும் சிறு ,குறு வியாபாரிகள் மற்றும் படகு ஓட்டுனர்கள் மகிழ்ச்சி -யடைந்துள்ளனர்.