"சம்பளம் உயரப்போகுது" வருகிறது 8ஆவது ஊதிய கமிஷன்.. அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!
Pay Commission: 8வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அரசு இன்று முடிவு செய்துள்ளது. அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை ஆய்வு செய்து ஊதியக் கமிஷன் பரிந்துரைகள் வழங்க உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை மாற்றியமைக்கும் நோக்கில் 8வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அரசு இன்று முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.
அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயிப்பதில் ஊதிய கமிஷன் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 1947ஆம் ஆண்டு முதல், மத்திய அரசு ஏழு ஊதியக் கமிஷன்களை அமைத்துள்ளது. அரசாங்க ஊழியர்களின் சம்பளம் மட்டும் இன்றி அவர்களுக்கான சலுகைகள் மற்றும் அலோவன்ஸ்களை தீர்மானிப்பதிலும் ஊதிய கமிஷன் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் ஆணையத்தின் பரிந்துரைகளைப் பின்பற்றியே, சம்பளம் வழங்கி வருகின்றன.
உயர்கிறதா அரசு ஊழியர்களின் சம்பளம்?
கடைசியாக, 7வது ஊதியக்குழு, கடந்த 2014ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் 2016ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை மாற்றியமைக்கும் நோக்கில் 8வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அரசு இன்று முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "8ஆவது ஊதியக்குழு அமைக்கும் முடிவை பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ளார்.
மோடி கொடுத்த கிரீன் சிக்னல்:
மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது மத்திய ஊதியக் குழுவுக்கு பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். ஊதியக் குழுவின் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். இந்தியா முழுவதும் 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர்.
ஏழாவது ஊதியக் குழுவின் பதவிக்காலம் முடிவதற்குள், 2025ஆம் ஆண்டில் புதிய ஊதியக் குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் ஏற்கப்படுவது உறுதி செய்யப்படும். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்" என்றார்.
8வது ஊதியக் குழுவின் முதன்மைப் பணியானது, தற்போதைய பொருளாதார சூழல் மற்றும் பணவீக்க விகிதங்களுடன் ஒத்துப்போகும் மத்திய அரசு ஊழியர்களின் (CGEs) ஊதியம், சலுகைகள் மற்றும் ஓய்வூதியங்களை ஆய்வு செய்து பரிந்துரைப்பதாகும்.
இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

