மேலும் அறிய

Ranji Trophy; கல்தா கொடுத்த கோலி... கேப்டனாக களமிறங்கும் ரிஷப் பண்ட்...

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது குறித்து விராட் கோலி பதிலளிக்காமல் உள்ள நிலையில், டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

இந்தியாவில், முதல் தர கிரிக்கெட் போட்டிகளில், ரஞ்சிக் கோப்பை முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு, இந்திய அணியில் இடம் கிடைக்கும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். அதே நேரத்தில், சர்வதேச போட்டிகளில் விளையாடும் இந்திய வீரர்கள் கூட, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் ஆடுவதுண்டு. இந்த நிலையில், ரஞ்சிக் கோப்பை போட்டியில் விளையாடும் டெல்லி அணி குறித்த அறிவிப்பு நாளை(17.01.25) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ranji Trophy; கல்தா கொடுத்த கோலி... கேப்டனாக களமிறங்கும் ரிஷப் பண்ட்...

ரிஷப் பண்ட் தலைமையில் களமிறங்கும் டெல்லி அணி?

தற்போது நடைபெற்றுவரும் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளன. இதில், டெல்லி அணி, வரும் 23-ம் தேதி மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெறும் அடுத்த போட்டியிலும் வெற்றி பெற்றால்தான், நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நிலையில் உள்ளது. அதனால், அந்த அணிக்கு சிறந்த வீரர்கள் தேவைப்படுகின்றனர். இந்த நிலையில், ரஞ்சிக் கோப்பையில் விராட் கோலி, ரிஷப் பண்ட், ஹர்ஷித் ராணா ஆகியோர் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ராணா இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாட இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதால், அவர் பங்கேற்க வாய்ப்பில்லை. இதனிடையே, தனது பங்கேற்பை டெல்லி கிரிக்கெட் சங்கத்திடம் ரிஷப் பண்ட் உறுதி செய்துவிட்டதாக தெரிகிறது.

Ranji Trophy; கல்தா கொடுத்த கோலி... கேப்டனாக களமிறங்கும் ரிஷப் பண்ட்...

கல்தா கொடுத்த கோலி...

இந்த நிலையில், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட கோலி, முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பது குறித்து, இதுவரை டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கு விராட் கோலி எந்த பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், நாளை(17.01.25) நடைபெறும் சங்கத்தின் கூட்டத்தில், சவுராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில், ரிஷப் பண்ட் தலைமையில் டெல்லி அணியை களமிறக்க முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. அதோடு மொத்த அணி விவரங்களும் நாளை(17.01.25) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TNTET Exam 2026: ஜூலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு; விண்ணப்பிக்க ரெடியா? தேதி, கட்டணம், தகுதி, தேர்வு முறைகள்..

சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி ஏன்? தவிர்க்க முடியுமா? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்

IND vs PAK: 10 நொடிக்கு 40 லட்சம் பில்.. இந்தியா - பாகிஸ்தான் போட்டியால் டிவி, ஓடிடி வசூல் வேட்டை!

PM Modi: டிக்கெட் புக் செய்து பிரதமர் மோடியை கலாய்த்த காங்கிரஸ்..! ”ஒரு மணி நேரம் தான், ட்ரை பண்லாமே”

ABP Premium

வீடியோ

Haryana Minister Anil Vij Vs SP | BJP அமைச்சர் vs SP
Kerala Viral Woman | Real அவ்வை சண்முகி!
Jothimani |
Salem Dharanidharan Vaiko |
Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNTET Exam 2026: ஜூலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு; விண்ணப்பிக்க ரெடியா? தேதி, கட்டணம், தகுதி, தேர்வு முறைகள்..
TNTET Exam 2026: ஜூலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு; விண்ணப்பிக்க ரெடியா? தேதி, கட்டணம், தகுதி, தேர்வு முறைகள்..
சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி ஏன்? தவிர்க்க முடியுமா? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி ஏன்? தவிர்க்க முடியுமா? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
IND vs PAK: 10 நொடிக்கு 40 லட்சம் பில்.. இந்தியா - பாகிஸ்தான் போட்டியால் டிவி, ஓடிடி வசூல் வேட்டை!
IND vs PAK: 10 நொடிக்கு 40 லட்சம் பில்.. இந்தியா - பாகிஸ்தான் போட்டியால் டிவி, ஓடிடி வசூல் வேட்டை!
PM Modi: டிக்கெட் புக் செய்து பிரதமர் மோடியை கலாய்த்த காங்கிரஸ்..! ”ஒரு மணி நேரம் தான், ட்ரை பண்லாமே”
PM Modi: டிக்கெட் புக் செய்து பிரதமர் மோடியை கலாய்த்த காங்கிரஸ்..! ”ஒரு மணி நேரம் தான், ட்ரை பண்லாமே”
காஞ்சிபுரத்தில் காய்ச்சல், சளி பாதிப்பு அதிகரிப்பு: பறவைக் காய்ச்சல் அச்சம்- ராமதாஸ் எச்சரிக்கை!

நெருங்கும் 10, பிளஸ் 2 பொதுத்தேர்வு; புதிய மாற்றங்கள்! மாணவர்கள் கவனத்திற்கு- முக்கிய அறிவிப்பு

IND Vs Pak: இந்தியா - பாகிஸ்தான் போட்டி கோவிந்தா? அடித்து வெளுக்க தயாராகும் மழை - வானிலை எச்சரிக்கை

முடி வளர ஆபரேஷன் பண்ணப்போறீங்களா? அரசாங்கம் சொன்னதை படிச்சுட்டு போங்க!

Embed widget