AjithKumar Racing; அஜித்குமார் ரேஸிங் அணி வீரரின் இன்ஸ்டா பதிவு... என்ன சொல்லியிருக்கார்.?
அஜித்குமார் ரேஸிங் அணி வீரர் ஃபேபியன், இன்ஸ்டா பதிவு ஒன்றை வெளியிட்டு, ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். துபாய் கார் பந்தயத்தில் வெற்றி வாகை சூடிய நிலையில் பதிவு வைரலாகிறது.

நடிகர் அஜித் குமார் தொடங்கிய கார் ரேஸ் குழு
கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித்குமார், பைக் மற்றும் கார் ஓட்டுவதிலும் வல்லவர் என்பது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான். அஜித்தும் அவ்வப்போது ரேஸ் போட்டிகளில் பங்குபெறுவது வழக்கம். அதோடு நின்றுவிடாமல், சமீபத்தில், அஜித் குமார் ரேஸிங் என்ற அவரது தலைமையிலான சொந்த கார் ரேஸ் குழு ஒன்றை தொடங்கினார். இந்த செய்தியை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா பதிவிட்ட உடன், அந்த செய்தி ரேஸில் ஓடும் கார் வேகத்தில் பரவியது. ரசிகர்களும் பெரும் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில், தன்னுடைய அணிக்கான வீரர்களையும் அவர் தேர்ந்தெடுத்து அறிவித்தார்.
அஜித் அணி ரேஸ் வீரராக ஃபேபியன் டுஃபியக்ஸ் தேர்வு
இந்த நிலையில், செப்டம்பர் 30-ம் தேதி பெல்ஜியத்தைச் சேர்ந்த கார் பந்தய வீரரான ஃபேபியன் டுஃபியக்ஸ் தனது அணியின் அதிகாரப்பூர்வ ரேஸ் ஓட்டுநராகவும், குழுவின் மேனேஜராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அஜித் குமார். அறிவித்தார். இந்த செய்தியும் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. பின்னர், பயிற்சியின்போது அஜித் பெரும் விபத்தை சந்தித்த நிலையில், அவர் குறித்த அப்டேட்டுகளை கொடுத்தது இந்த ஃபேபியன் டுஃபியக்ஸ் தான். அஜித் மரணத்தின் அருகில் சென்று வந்தார் என அவர் கூறியது, ரசிர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியது.
துபாய் கார் பந்தயத்தில் பங்கேற்று வெற்றி
தொடர்ந்து பயிற்சியை நிறைவு செய்த அஜித் ரேஸிங் அணி, துபாயில் ஜனவரி 12-ம் தேதி நடைபெற்ற 24 ஹெச் சீரிஸ் கார் பந்தயத்தில் பங்கேற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், கடைசி நேரத்தில், த்ரில்லிங்கான முறையில் அஜித்தின் அணி 3-வது இடத்தை பிடித்து அசத்தியது. இந்த செய்தி உலகளவில் பேசுபொருளாக மாறி, அஜித்திற்கு பெரும் பாராட்டுகள் குவிந்தன.
ஃபேபியன் டுஃபியக்ஸ் இன்ஸ்டா பதிவு
இந்த நிலையில், ஃபேபியன் டுஃபியக்ஸ் இன்று(16.01.25) தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். மேலும், அஜித் குமாரின் குழுவுடன் அடுத்த ரேஸில் பங்கெடுக்க ஆவலாக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் தனது பெயரை, Fabian மாமா என்று குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

