TVK Vijay : ”நேர்ல வர முடியாதா விஜய்? CM சீட் மட்டும் வேணுமா!” திட்டித் தீர்க்கும் மக்கள்
கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் ஆக உள்ள நிலையில், ஒரு முறை கூட விஜய் களத்திற்கு சென்று மக்களளை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பல மாதங்களாக உள்ள நிலையில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்திக்காமல் கட்சி அலுவலகத்திற்கு அழைத்து 300 பேருக்கு மட்டும் விஜய் நிவாரணம் வழங்கி இருப்பது விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தவெக என்னும் கட்சியை ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டையும் நடத்தினார். விஜய் கட்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆக உள்ள நிலையில் அவர் ஒரு முறை கூட மக்களை நேரடியாக சந்திக்கவில்லை என்ற விமர்சனம் கட்சி தொடங்கிய நாள் முதல் இருந்து வருகிறது. 2026 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் விஜய் களத்திற்கு சென்று ஒரு முறை கூட மக்களை சந்திக்காதது ஆச்சரியமாக இருக்கிறது என்று விஜய் ரசிகர்களே வருத்தம் தெரிவித்து வருகின்றனர். விஜய் சோசியல் மீடியாவில் மட்டுமே கட்சி நடத்தி வருகிறார் என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு தமிழ் நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் அரகேறிவுள்ளது. நடந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் ஆளும் கட்சி முதல் எதிர்க்கட்சிகள், மாற்றுக்கட்சிகள் என அனைவரும் சீறி பாய்ந்த நிலையில் விஜய் கண் துடைப்பு அறிக்கை மட்டும் விட்டு கட்சி நடத்திவிடலாம் என்று என்ணிவிட்டார் போல என பல விமர்சனங்கள் எழுந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாகவும் லேட்டாகத்தான் அறிக்கைவிட்டர். அதே போல், பகுஜான் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட போது தமிழக முதல்வர், எதிர்க்கட்சி தலைவரெல்லாம் அவரது ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறினார்கள். ஆனால் விஜய் அதற்கும் அறிக்கை ஒன்றை விட்டு அதோடு நிறுத்துக்கொண்டார். அண்மையில் சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டது என தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய பிரச்சனைகளின் போதெல்லாம் அறிக்கை மட்டுமே விஜய் வெளியிட்டு வருவதாகவும் விஜய் அரசியலுக்கு அன்ஃபிட்டு எனறு சமூக வலைதளங்களில் தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் பெஞ்சல் புயலால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் திருவண்ணாமலையில் ஏற்பட்ட வெள்ளம் பாதிப்புக்கு விஜய் ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தான் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்ப்பட்ட மக்களை பேருந்து மூலம் தனது பனையூர் தவெக அலுவலகத்திற்கு வரவழைத்து விஜய் நிவாரணம் வழங்கி இருக்கிறார். பெஞ்சல் புயலால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் ஒரு கட்சியின் தலைவராக களத்திற்கு சென்று சந்திக்காமல் அவர்களை வீட்டிற்கு அழைத்து நிவாரணம் வழங்கி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 தேர்தலை சந்தக்கப்போகிறேன் என மாநாட்டில் மார்த்தட்டி சொன்ன விஜய் மழையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று கூட பார்க்க முடியாத, நேரில் சென்று நிவாரனம் வழங்க முடியாத என சர்ச்சை கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் நேரில் சென்று உதவி வழங்காதது ஏன் என்று விஜய் விளக்கம் அளித்துள்ளார்.உங்கள் வீடுகளுக்கு வந்து நலத்திட்ட உதவிகளை நான் வழங்கி இருக்கலாம். ஆனால், உங்களுடன் இப்படி அமர்ந்து பேச முடியாது, அங்கு வந்தால் நெரிசல் ஏற்படும். உங்கள் அனைவரிடமும் சிரமம் இல்லாமல் பேச முடியது. நேரம் செலவிட முடியாது. நேரில் வந்த நிவாரணம் வழங்கவில்லை என்று தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்”என்று விஜய் கூறியதாக கூறப்படுகிறது, ஆனாலும் இந்த புயலில் பாதிக்கப்பட்டவர்கள் 300 பேர் மட்டும் தானா மற்றவர்களின் நிலை என்ன அவர்களை விஜய் எப்போது சந்திக்கப்போகிறார் என கேள்வி எழுந்துள்ளது.