Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTION
ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பாதிக்கப்பட்ட ஆறுதல் தெரிவித்த ராகுல் காந்தி அவர்களுக்கு கூடுதல் நிவாரண உதவி வழங்க வலியுறுத்தி உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உத்திர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் கடந்து இரண்டாம் தேதி சாமியார் போலே பாபா ஆன்மீக நிகழ்ச்சி நடந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான சாமியார் போலே பாபா மீது போலீசார் இதுவரை முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யாமல் உள்ளனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 50000 நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச அரசு அறிவித்ததுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஹத்ராஸ் தொகுதிக்கு ராகுல் காந்தி நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அரசின் உதவி போதுமானதாக இல்லை ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையை உத்திரபிரதேச அரசு விரைந்து வழங்க வேண்டும் என்று கூறியுள்ள அவர் தமது கோரிக்கையை அரசு ஏற்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்தாம் தேதி பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தபோது அவர்களின் துயரங்களுக்கு ஆறுதல் கூற தமக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை என்றும் இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்கு உரிய உதவிகளை வழங்குவது முக்கியம் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவத்தில் வெளிப்படையான முறையில் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் அதற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் யோகி ஆதித்யநாத்திற்கு எழுதி உள்ள கடிதத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இச் சம்பவத்தை விசாரிக்க நியமித்த மூன்று பேர் கொண்ட நீதிவிசாரணை குழு நேற்று விசாரணையை தொடங்கினர் என்பது குறிப்பிடதக்கது.