Vinesh Phogat: பாரீஸ் ஒலிம்பிக்ஸுக்கு சூப்பர் முன்னோட்டம்; ஸ்பானிஷ் கிரான்ட் பிரிக்ஸ்சில் தங்கம் வென்ற வினேஷ் போகட்!
பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடர் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இச்சூழலில்தான் ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
பாரீஸ் ஒலிம்பிக் 2024க்கு முன்னதாக நடந்த ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வினேஷ் போகட் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடர் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இச்சூழலில் தான் ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் மகளிர் 50 கிலோ மல்யுத்த எடைபிரிவில் வினேஷ் போகட் கலந்து கொண்டார். இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற இவர் இறுதிப் போட்டியில் மரியா டியம்ரெகோவாவை எதிர்கொண்டார்.
மரியாவை வீழ்த்திய வினேஷ் போகட்:
ரஷ்ய வீராங்கனையான மரியா டியம்ரெகோவாவை 10-5 என்ற கணக்கில் வீழ்த்தினார் வினேஷ் போகட். மரியாவை வீழ்த்தியதன் மூலம் ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற 29 வயதான இவர் முதலில் பான் அமெரிக்கன் சாம்பியனான கியூபாவின் யூஸ்னிலிஸ் குஸ்மானை 12-4 என்ற புள்ளிகளில் தோற்கடித்தார்.
Update: 2024 Grand Prix of Spain🇪🇸🤼♀☑️#TOPSchemeAthlete and star wrestler Vinesh Phogat wins gold medal🥇in women's 50 kg category by defeating Russian🇷🇺 wrestler 10-5.
— SAI Media (@Media_SAI) July 7, 2024
Many congratulations, champ!👏🏻🥳
Best wishes for #Paris2024👍🏻@Phogat_Vinesh @wfi_wrestling pic.twitter.com/P33uJLPdls
2022 பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கனடாவின் மேடிசன் பார்க்ஸுக்கு எதிராக காலிறுதியில் வெற்றியைப் பதிவு செய்தார்.
அரையிறுதியில் வினேஷ் மற்றொரு கனேடிய வீராங்கனை கேட்டி டச்சக்கை 9-4 என்ற புள்ளிகளில் தோற்கடித்தார். ஸ்பெயினில் தனது பயிற்சி மற்றும் போட்டிக்குப் பிறகு, வினேஷ் பாரீஸ் விளையாட்டுப் போட்டிகளுக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ள 20 நாள் பயிற்சிக்காக பிரான்சுக்குச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: BCCI: உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி - ஒவ்வொரு வீரருக்கும் இத்தனை கோடிகளா? மொத்த லிஸ்ட் இதோ!
மேலும் படிக்க: Abhishek Sharma: ரசிகர்களே! அபிஷேக் சர்மா விளையாடுன பேட் யாரோடது தெரியுமா?