Rajinikanth: நெப்போலியனைப் பார்த்து தயங்கிய ரஜினிகாந்த்! அப்படி என்ன நடந்துச்சு?
எஜமான் படத்தில் நெப்போலியனை வில்லனாக நடிக்க வைக்க ரஜினிகாந்த மிகவும் தயக்கம் காட்டியுள்ளார்.

இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் எஜமான். ரஜினிகாந்த் கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம் இப்போது அவரது ரசிகர்களுக்கு மிகவும் விருப்பமான படமாக உள்ளது.
தயங்கிய ரஜினி:
ஆர்வி உதயகுமார் இயக்கத்தில் வெளியாகிய இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு வில்லனாக நடித்தவர் நெப்போலியன். ஆனால், இந்த படத்தில் நெப்போலியனை வில்லனாக நடிக்க வைக்க ரஜினிகாந்த் தயக்கம் காட்டியுள்ளார். இதுதொடர்பாக, ஒரு முறை நெப்போலியன் தனது பேட்டியில் கூறியிருப்பதாவது, நான் அப்போதுதான் வளர்ந்து வரும் நடிகர். ரஜினி சார் பார்வையில் அவரு சின்னவயசா இருக்காரே, இந்த பையனை போட்றீங்களே? மெச்சூரிட்டியா இருக்குற ராதாரவியை போடலாம்.. இல்லாட்டி கன்னட பிரபாகரை போடலாம்னு கேட்ருக்காரு.
ரஜினி ஒப்புக்கொண்டது எப்படி?
அப்போ ஆர்வி உதயகுமார் சொல்லிருக்காரு எம்.ஜி.ஆர் சாரை விட நம்பியார் சார் இளையவர். நம்பியார் எம்.ஜி.ஆருக்கு அப்பாவா, மாமனாரா நடிச்சுருக்காரு. அதேமாதிரி நெப்போலியன் சின்ன வயசா இருந்தாலும் அவரை போட்டோம்னா உங்களுக்கு ஏத்த வயசு மாதிரி தோணும். அதுனால நல்லா இருக்கும்னு சொல்லிதான் கமிட் பண்ணோம்னு சொன்னாரு. உன்னைவிட ஒரு வயசு மூத்தவன் நான்னு வசனம் கூட அதுல வரும்.
பாராட்டிய ரஜினி:
ரஜினி சார் படம் எனக்கு அந்த மாதிரி கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கல. ஏவிஎம் சரவணன் சார் பேனர். ஏவிஎம் பேனர்னால எனக்கு மிகப்பெரிய அளவுல அமைஞ்சது. கடைசியா ரஜினி சார்தான் டப்பிங் பேசிட்டு வந்தாரு. பேசிட்டு வந்தவுடனே எனக்கு போன் பண்ணி நெப்போலியன் ரொம்ப அற்புதமா நடிச்சுருக்கீங்க.
நான் ஆரம்பத்துல யோசிச்சேன். ரொம்ப பிரமாதமா அமைஞ்சது உங்க கதாபாத்திரம். மிகப்பெரிய அளவுல உங்களுக்கு பேர் வரும் அப்படின்னாரு. சார் அது நீங்க கொடுத்த வாய்ப்புதான் சார். எனக்கு உங்க படத்துல நடிச்சதாலதான் சார் அந்த வாய்ப்பு. ரொம்ப பாராட்டுனாரு.
இவ்வாறு நெப்போலியன் பேசினார்.
1993ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக ஆர்வி உதயகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா, ஐஸ்வர்யா நடித்திருப்பார்கள். ஏவிஎம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இவர்களுடன் நம்பியார், மனோராமா, விஜயகுமார், கவுண்டமணி, செந்தில், பீலிசிவம் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

