மேலும் அறிய

IPL RCB vs RR : மீண்டும் வெற்றிக்கணக்கை தொடங்குமா பெங்களூர்..? முட்டுக்கட்டை போடுமா ராஜஸ்தான்..?

IPL RCB vs RR : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன.

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. புனேவில் நடைபெறும் இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடர் தொடங்கியது முதலே ராஜஸ்தான் அணியும், பெங்களூர் அணியும் மிகவும் பலமான அணிகளாக விளங்கி வருகிறது.

ராஜஸ்தான் அணியை பொறுத்தமட்டில் ஜோஸ் பட்லர் அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக உள்ளார். அவர் இதுவரை 2 சதங்கள் அடித்து இந்த தொடருக்கான ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். அவருக்கு தேவ்தத் படிக்கல் தொடக்க வீரராக நல்ல ஒத்துழைப்பு அளிக்கிறார். கடந்த போட்டியில் அவர் தனது பார்மை மீட்டார். கேப்டன் சஞ்சு சாம்சனும், ஹெட்மயரும் அதிரடியில் கலக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IPL RCB vs RR : மீண்டும் வெற்றிக்கணக்கை தொடங்குமா பெங்களூர்..? முட்டுக்கட்டை போடுமா ராஜஸ்தான்..?

வேகத்தில் அசத்த ட்ரென்ட் போல்ட் மற்றும் பிரசித் கிருஷ்ணா உள்ளனர். அவர்களுக்கு ஓபெட் மெக்காய் ஒத்துழைப்பு அளிக்க உள்ளார். ராஜஸ்தான் அணியின் பலமாக யுஸ்வேந்திர சாஹல் உள்ளார். அவர் இந்த தொடரில் சுழலில் அசத்தி வருகிறார். தன்னுடைய முந்தைய அணியான பெங்களூருக்கு எதிராக அவர் இன்று களமிறங்குகிறார். அவருடன் சுழலில் அசத்த அஸ்வினும் உள்ளார்.

பெங்களூர் அணியை பொறுத்தவரை இந்த தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனாலும், கடந்த போட்டியில் 69 ரன்களில் சுருண்டது அந்த அணிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியது. இருப்பினும் அதில் இருந்து மீண்டு வந்து இந்த போட்டியில் பெங்களூர் அசத்தும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். அந்த அணியின் கேப்டன் பாப் டுப்ளிசிஸ் தனது அதிரடியான பேட்டிங்கை இன்று அசத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

IPL RCB vs RR : மீண்டும் வெற்றிக்கணக்கை தொடங்குமா பெங்களூர்..? முட்டுக்கட்டை போடுமா ராஜஸ்தான்..?

அவருக்கு இளம் வீரர் அனுஜ் ராவத் நல்ல ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியம். கடந்த இரண்டு போட்டிகளில் கோல்டன் டக் அவுட்டாகிய விராட்கோலி இந்த போட்டியில் ஒரு கம்பேக் கொடுப்பார் என்று நம்பலாம். அதிரடி வீரர் மேக்ஸ்வெல் நிச்சயம் இந்த போட்டியிலும் தனது அதிரடியை காட்டுவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். இளம் வீரர் பிரபுதேசாய் மற்றம் ஷாபாஸ் அகமது இருவரும் மிடில் ஆர்டரில் நம்பிக்கை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினேஷ் கார்த்திக் இந்த தொடரிலே மிகச்சிறந்த பினிஷராக அசத்தி வருகிறார்.

பெங்களூர் அணியின் பந்துவீச்சில் ஹர்ஷல் படேலும், ஹேசில்வுட்டும் நம்பிக்கை அளிக்கின்றனர். முகமது சிராஜ் கட்டுக்கோப்பாக பந்துவீசினால் எதிரணிக்கு நெருக்கடி ஏற்படும். ஹசரங்கா சுழலில் மிகப்பெரிய நம்பிக்கையாக உள்ளார். அவருடன் ஷாபாஸ் மற்றும் மேக்ஸ்வெல்லும் சுழலில் ஒத்துழைக்க உள்ளனர்.

IPL RCB vs RR : மீண்டும் வெற்றிக்கணக்கை தொடங்குமா பெங்களூர்..? முட்டுக்கட்டை போடுமா ராஜஸ்தான்..?

புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள ஆர்.சி.பி. 8 போட்டிகளில் ஆடி 5 வெற்றி 3 தோல்வியுடன் உள்ளது. புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 போட்டிகளில் ஆடி 5 போட்டியில் வெற்றி 2 தோல்விகளுடன் 3வது இடத்தில் உள்ளது. ப்ளே ஆப் வாய்ப்புக்கு அடுத்தடுத்த போட்டிகளில் பிரம்மாண்ட வெற்றியை பெறவே இரு அணிகளும் விரும்பும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இரு அணிகளும் இதுவரை 25 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இவற்றில் 10 போட்டியில் ராஜஸ்தான் அணியும், 13 போட்டியில் பெங்களூர் அணியும் மோதியுள்ளன. 2 போட்டியில் முடிவு கிடைக்கவில்லை. கடைசியாக ஆடிய 5 போட்டியிலும் பெங்களூர் அணியே வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும்  இடையே விராட்கோலி அதிகபட்சமாக 584 ரன்களை விளாசியுள்ளார். ரஹானே ராஜஸ்தான் அணிக்காக 347 ரன்களை விளாசியுள்ளார். தனிநபர் அதிகபட்சமாக பெங்களூருக்காக படிக்கல் 101 ரன்களை விளாசியுள்ளார். அவர் தற்போது ராஜஸ்தானுக்காக ஆடுகிறார். அதிகபட்சமாக சாஹல் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் தற்போது ராஜஸ்தான் அணிக்காக ஆடுகிறார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sindoor Attack: மாஸ் காட்டிய மோடி - கொண்டாடும் இந்தியா.. அப்ப கோட்டை விட்டதற்கு யார் பொறுப்பு? விடையில்லா கேள்வி
Sindoor Attack: மாஸ் காட்டிய மோடி - கொண்டாடும் இந்தியா.. அப்ப கோட்டை விட்டதற்கு யார் பொறுப்பு? விடையில்லா கேள்வி
Pakistan Economy Affect: எங்க கிட்டயா ஆட்டம் காட்டுற.? ஆபரேஷன் சிந்தூரால் சிதறும் பாகிஸ்தானின் பொருளாதாரம்...
எங்க கிட்டயா ஆட்டம் காட்டுற.? ஆபரேஷன் சிந்தூரால் சிதறும் பாகிஸ்தானின் பொருளாதாரம்...
Sophia Qureshi: இந்திய ராணுவத்தின் சிங்கப்பெண்.. யார் இந்த கர்னல் சோபியா குரேஷி.?
இந்திய ராணுவத்தின் சிங்கப்பெண்.. யார் இந்த கர்னல் சோபியா குரேஷி.?
Jemimah Rodrigues: ரோலக்ஸாக மாறிய ரோட்ரிக்ஸ்! லேடீசே ராணுவ படை! 337 ரன்களை விளாசிய இந்தியா
Jemimah Rodrigues: ரோலக்ஸாக மாறிய ரோட்ரிக்ஸ்! லேடீசே ராணுவ படை! 337 ரன்களை விளாசிய இந்தியா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION SINDOOR என்றால் என்ன?ஏன் இந்த பெயர் வைக்கப்பட்டது?ஆபரேசன் சிந்தூர் பின்னணி?Operation Sindoor Indian Army: ”ஆபரேஷன் சிந்தூர்” இந்தியா அதிரடி தாக்குதல்! மிரண்டு போன பாகிஸ்தான்Kovil Festival Fight | தீயிட்டு கொளுத்தப்பட்ட வீடுகள்! திருவிழாவில் வெடித்த மோதல்! நடந்தது என்ன?Prakash Raj slams TVK Vijay | ”விஜய்க்கு அரசியல் புரியல பவன் கூட கம்பேர் பண்ணாதீங்க” அட்டாக் செய்த பிரகாஷ்ராஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sindoor Attack: மாஸ் காட்டிய மோடி - கொண்டாடும் இந்தியா.. அப்ப கோட்டை விட்டதற்கு யார் பொறுப்பு? விடையில்லா கேள்வி
Sindoor Attack: மாஸ் காட்டிய மோடி - கொண்டாடும் இந்தியா.. அப்ப கோட்டை விட்டதற்கு யார் பொறுப்பு? விடையில்லா கேள்வி
Pakistan Economy Affect: எங்க கிட்டயா ஆட்டம் காட்டுற.? ஆபரேஷன் சிந்தூரால் சிதறும் பாகிஸ்தானின் பொருளாதாரம்...
எங்க கிட்டயா ஆட்டம் காட்டுற.? ஆபரேஷன் சிந்தூரால் சிதறும் பாகிஸ்தானின் பொருளாதாரம்...
Sophia Qureshi: இந்திய ராணுவத்தின் சிங்கப்பெண்.. யார் இந்த கர்னல் சோபியா குரேஷி.?
இந்திய ராணுவத்தின் சிங்கப்பெண்.. யார் இந்த கர்னல் சோபியா குரேஷி.?
Jemimah Rodrigues: ரோலக்ஸாக மாறிய ரோட்ரிக்ஸ்! லேடீசே ராணுவ படை! 337 ரன்களை விளாசிய இந்தியா
Jemimah Rodrigues: ரோலக்ஸாக மாறிய ரோட்ரிக்ஸ்! லேடீசே ராணுவ படை! 337 ரன்களை விளாசிய இந்தியா
ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக அரசு! – சாதித்தது என்ன?
ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக அரசு! – சாதித்தது என்ன?
’’ஆபரேஷன் சிந்தூர் பெயரைக் கேட்டதும் கண்ணீர் வழிந்தது; இன்னும் அழுகிறேன்’’ பஹல்காமில் பலியானோரின் மனைவிகள் உருக்கம்!
’’ஆபரேஷன் சிந்தூர் பெயரைக் கேட்டதும் கண்ணீர் வழிந்தது; இன்னும் அழுகிறேன்’’ பஹல்காமில் பலியானோரின் மனைவிகள் உருக்கம்!
Operation Sindoor: பாகிஸ்தானை பதற வைத்த ஆபரேஷன் சிந்தூர்! இந்தியா தாக்கிய 9 இடங்கள் எது? எது?
Operation Sindoor: பாகிஸ்தானை பதற வைத்த ஆபரேஷன் சிந்தூர்! இந்தியா தாக்கிய 9 இடங்கள் எது? எது?
Operation Sindoor: 1.05 முதல் 1.30 வரை 25 நிமிட தாக்குதல்; துல்லியமாக குறித்து அடித்த இந்தியா- ஆபரேஷன் சிந்தூர் நடந்தது எப்படி?
Operation Sindoor: 1.05 முதல் 1.30 வரை 25 நிமிட தாக்குதல்; துல்லியமாக குறித்து அடித்த இந்தியா- ஆபரேஷன் சிந்தூர் நடந்தது எப்படி?
Embed widget