’’ஆபரேஷன் சிந்தூர் பெயரைக் கேட்டதும் கண்ணீர் வழிந்தது; இன்னும் அழுகிறேன்’’ பஹல்காமில் பலியானோரின் மனைவிகள் உருக்கம்!

இதுகுறித்து பஹல்காம் தாக்குதலில் பலியான சந்தோஷ் ஜக்டலேவின் மனைவில் பிரஹதி ஜக்டலேவிடம் ஏஎன்ஐ கேள்வி எழுப்பியது. அவர் பேசும்போது, ''இது நிச்சயம் பொருத்தமான பதிலடிதான். எங்களின் குங்குமத்தை அழித்த தீவிரவாதிகளுக்கான பதிலடியும்கூட.
கண்களில் கண்ணீர் வழிந்தது
இந்த ஆபரேஷனின் பெயரைக் கேட்டதும் என் கண்களில் கண்ணீர் வழிந்தது. அரசுக்கு மனப்பூர்வமாக நன்றி சொல்கிறேன். நாம் அமைதியாக அமர்ந்திருக்க மாட்டோம் என்று மோடி ஜி காண்பித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் மூலம் பிரதமர் மோடி, தீவிரவாதத்துக்கு முடிவு கட்டுவார் என்று நம்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல ஷுபம் திவேதியின் மனைவி அஷன்யா திவேதி பேசும்போது, ’’என் கணவனின் மரணத்துக்கு பழி வாங்கிய அரசுக்கு நன்றி சொல்கிறேன். இது ஆரம்பம்தான். தீவிரவாதிகளை முழுமையாக அழித்து ஒழிக்கும்வரை மோடி ஓய மாட்டார் என்று எனக்குத் தெரியும்.
நாங்கள் நினைத்ததை முடித்த அரசு
பயங்கரவாத இடங்கள் அனைத்தும் அழிக்கப்படும் என்ற நம்பிக்கையை அவர், எங்களுக்கு அளித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயரிட்டதன் மூலம், நாங்கள் எதிர்பார்த்த பழிவாங்கலை, அரசு ஏற்றுக்கொண்டது என்பதை பிரதமர் மோடி காட்டியுள்ளார்’’ என்று தெரிவித்தார்.
சில நாட்களில் இன்னும் அழுகிறேன்
மேலும், பஹல்காம் தாக்குதலில் உயிர் நீத்த கஸ்துப் கன்போடே என்பவரின் மனைவி சங்கீதா கூறும்போது, ’’ராணுவத்தின் நடவடிக்கையை வரவேற்கிறோம். ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரின் மூலம் அவர்கள் பெண்களை மதித்திருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் அழுகிறேன். பிரதமர் மோடி இத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று நாங்கள் காத்திருந்தோம்’’ என தெரிவித்துள்ளார்.
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)



















