மேலும் அறிய

Sindoor Attack: மாஸ் காட்டிய மோடி - கொண்டாடும் இந்தியா.. அப்ப கோட்டை விட்டதற்கு யார் பொறுப்பு? விடையில்லா கேள்வி

Operation Sindoor: இந்தியாவின் சிந்தூர் தாக்குதலுக்கு மத்தியில், பஹல்காம் தாக்குதலில் இன்னும் பதில் தெரியாமல் நிலவும் கேள்விகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Operation Sindoor: இந்தியாவின் சிந்தூர் தாக்குதலுக்கு பிரதமர் மோடியை கொண்டாடும் வேளையில், பஹல்காமில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுக்கு தற்போது வரை யாரும் ஏன் பொறுப்பேற்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிந்தூர் - இந்திய ராணுவம் பதிலடி:

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு எல்லையில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. நள்ளிரவில் 24 நிமிடங்கள் நீடித்த இந்த தாக்குதலில் இந்தியா 25 ஏவுகணைகளை ஏவியதாக கூறப்படுகிறது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடைபெற்ற இந்த தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 80 பேர் வரை கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதேநேரம், இந்த தாக்குதலில் தங்கள் நாட்டு அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் குற்றம்சாட்டி வருகிறது. தீவிரவாதிகள் முகாம் மீது மட்டுமே தாக்குதல் நடத்தியாக இந்தியா கூறினாலும், பாகிஸ்தானில் உள்ள வழிபாட்டு தலங்களை இந்திய ஏவுகணைகள்  சேதப்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாஸ் காட்டிய மோடி.. கொண்டாடும் இந்தியா:

இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் நடத்திய இந்த தாக்குதலை இந்தியர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.  தீவிரவாதிகளுக்கு ”சரியான பதிலடி, ஜெய்ஹிந்த், வந்தே பாரத், பாரத் மாதாகி ஜெய்” என சமூக வலைதளங்களில் ஃபயர் விட்டு வருகின்றனர். குறிப்பாக, ”பிரதமர் மோடியின் ஆலோசனையின் பெயரிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது, சிந்தூர் என்ற உணர்ச்சிகரமான பெயரை மோடி தான் தேர்வு செய்தார், திட்டமிடப்பட்ட தாக்குதலை இரவு முழுவதும் தூங்காமல் கண்விழிந்த்து மோடி கண்காணித்து வந்தார், அடித்தால் வாங்கிக் கொள்ள பழைய இந்தியா கிடையாது, பிரதமர் மோடியின் புதிய இந்தியா” என பாஜகவினர் மற்றும் ஏராளமான ஊடகங்கள் பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளி வருகின்றன. இந்த ஒட்டுமொத்த வெற்றியும் பிரதமர் மோடியையே சாரும் என பாஜகவினர் மார்தட்டி வருகின்றப்னர்.

குறிவைக்கப்பட்ட சுற்றுலா பயணிகள்:

சிந்தூர் எனும் இந்த எல்லை தாண்டிய தாக்குதலின் ஆரம்பப் புள்ளி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தான். காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து கடந்த சில தசாப்தங்களில் நடத்தப்பட்ட மிகமோசமான தாக்குதல் இதுவாகும். இந்த தாக்குதலை தொடர்ந்து, ஒட்டுமொத்த மத்திய அரசு இயந்திரமும் வேகம்பெற்றது. பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களுக்கு பிறகு “சிந்தூர்” எனும் தாக்குதல் அரங்கேற்றப்பட்டு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.

கோட்டை விட்டதற்கு யார் பொறுப்பு?

தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்த பெருமை பிரதமர் மோடிக்கே என ஒட்டுமொத்த பாஜகவும் புகழ்பாடி வரும் நிலையில், பஹல்காமில் தீவிரவாதிகள் ஊடுவும் அளவிற்கு பாதுகாப்பில் கோட்டை விட்டதற்கு மட்டும் தற்போது வரை யாருமே பொறுப்பேற்கவில்லை ஏன்? யூனியன் பிரதேசமான ஜம்மு & காஷ்மீரில் பாதுகாப்புத்துறை மத்திய அரசு வசமே உள்ளது. அப்ப்டி இருந்தும் பாதுகாப்பில் கோட்டை விட்டதை பற்றி அரசு எங்குமே விளக்கமளிக்காதது ஏன்? முதல் நாள் முதலே தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி அளிக்கப்படும் என்பதே பிரதமர் மோடி தொடங்கி அனைத்து மத்திய அமைச்சர்களின் கூக்குரலாகவும் உள்ளது. ஆனால், பாதுகாப்பில் நடந்த தவறு என்ன? எப்படி உள்ளே நுழைந்தார்கள், எங்கு குறைபாடு ஏற்பட்டது, அதற்கு யார் காரணம் என எந்த விளக்கமும் இதுவரை இல்லையே. உதாரணமாக, ஒரு  ரயில் விபத்து நடந்தால் கூட குறைந்தபட்சம் சில பணியாளர்கள் தான் பொறுப்பு என கூறி, பணியிடை நீக்க எனும் குறைந்தபட்ச நடவடிக்கையாவது எடுக்கப்படும். ஆனால், நாட்டின் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுரு 26 உயிர்களை பறித்ததற்கு யார் பொறுப்பு? என்பது மட்டும் விடையில்லா கேள்வியாகவே தொடர்கிறது.

விடையில்லா கேள்விகள்:

தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பு தான், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு & காஷ்மீர் சென்று அங்கு தீவிரவாதம் ஒடுக்கப்பட்டுள்ளதாக கர்ஜித்தார். அடுத்த சில நாட்களிலேயே 26 பேர் அங்கு சுட்டுக் கொல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து,

  • பாகிஸ்தானை ஒட்டிய மிக முக்கியமான இந்த சுற்றுலா பகுதியில் போதிய பாதுகாப்பு இல்லையா?
  • 24 மணி நேரமும் ரோந்து பணி நடைபெறும் போதும் தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியது எப்படி?
  • தாக்குதலுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பே பஹல்காமில் தீவிரவாதிகள் முகாமிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், உளவுத்துறை என்ன தான் செய்து கொண்டு இருந்தது?
  • தாக்குதல் நடந்து இத்தனை நாட்களாகியும் அந்த 4 தீவிரவாதிகள் சிக்காதது எப்படி?
  • ராணுவமயமாக்கப்பட்ட ஜம்மு & காஷ்மீரில் நூற்றுக்கணக்கானோர் குவிந்திருந்த சுற்றுலா தளத்தில் ஒரு பாதுகாப்பு வீரர் கூட இல்லாதது எப்படி?
  • தாக்குதல் குறித்து அறிந்ததும் சவுதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி, பாதிக்கப்பட்டவர்களை கூட பார்க்காமல் பீகாரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டது நியாயமா?

அன்று கர்ஜித்த மோடி:

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, ​​குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீரில் நடந்த ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலுக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நோக்கி கேள்விக் கனைகளை தொடுத்தார். டெல்லியில் உள்ள சக்திகள் நாட்டின் எல்லைகள் மற்றும் நிதி, தகவல் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றின் மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும்போது, ​​தீவிரவாதிகள் எல்லையைக் கடந்து மக்களை எவ்வாறு தங்கள் விருப்பப்படி கொல்ல முடியும் என மத்திய அரசை சாடினார். ஆனால், இன்று பிரதமராக இருக்கும் மோடி தாக்குதலுக்கு பொறுப்பேற்காமல், ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள பீகார் தேர்தலுக்கான மைலேஜ் ஆக அதனை பயன்படுத்த முயல்கிறார் என்பதே இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டாக உள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget