IPL 2025 Tamilnadu Players: அஷ்வின் டூ ஆந்த்ரே சித்தார்த்.. தமிழக வீரர்களை அள்ளிப்போட்ட CSK.. முழுப்பட்டியல் இதோ!
IPL Auction 2025 Tamilnadu Players List: சென்னை அணி மட்டும் ஐபிஎல் 2025 ஏலத்தில் 4 தமிழக வீரர்களை ஏலத்தில் எடுத்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஐபிஎல் மெகா ஏலம் 2025-ல் மொத்தம் 8 தமிழக வீரர்கள் ஏலம் போன நிலையில் சென்னை அணி மட்டும் 4 தமிழக வீரர்களை இந்த ஏலத்தில் எடுத்துள்ளது.
தமிழக வீரர்கள்:
ஐபிஎல் மெகா ஏலத்தில் 24 தமிழக வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். ஏலத்திற்கு முன்பாக தமிழக வீரர்கள் சாய் சுதர்சன், ஷாருக்கான்( குஜராத் டைடன்ஸ்) வருண் சக்கரவர்த்தி ( கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) ஆகிய மூன்று வீரர்கள் தங்கள் அணிகளால் தக்கவைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க : Gurjapneet Singh: பஞ்சாப் டூ சென்னை! ஸ்டம்புகளை சிதற வைக்கும் யார்க்கர் மன்னன்.. யார் இந்த குர்ஜப்னீத் சிங்?
ஐபிஎல் ஏலம்:
ரவிச்சந்திரன் அஷ்வின்:
இந்த ஏலத்தின் முதல் நாளில் முதல் வீரராக தமிழக வீரராக ரவி அஷ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அணிக்காக விளையாட உள்ளார்.
தங்கராசு நட்ராஜன்:
அடுத்ததாக தமிழக வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜனை டெல்லி கேபிடல்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இறுதி வரை சண்டையிட்டு இறுதியில் டெல்லி அணி நடராஜனை 10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி. மிட்செல் ஸ்டார்க்குடன் இணைந்து பந்து வீசும் வாய்ப்பை நடராஜன் பெற்றுள்ளது, அவருக்கு ஒரு நல்ல ஒரு அனுபவமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
விஜய் சங்கர்:
தமிழக அணியின் கேப்டனான விஜய் சங்கரை சென்னை அணி 1.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. தனது அறிமுக சீசனை சென்னையில் தொடங்கிய விஜய் சங்கர் தற்போது சென்னை அணிக்கு திரும்பியுள்ளார்.
வாஷிங்டன் சுந்தர்:
ஏலத்தின் இரண்டாவது நாளில் வாஷிங்டன் சுந்தரை குஜராத் டைடன்ஸ் அணி 3.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
மணிமாறன் சித்தார்த்:
தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த்தை மீண்டும் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
சாய் கிஷோர்:
சென்ற ஆண்டு குஜராத் அணிக்காக ஆடிய சாய் கிஷோரை மீண்டும் 2 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது குஜராத் அணி
குர்ஜப்னீத் சிங்:
சென்னை அணியின் கடந்த சில ஆண்டுகளாக நெட் பவுலராக இருந்த குர்ஜப்னீத் சிங் சூப்பர் கிங்ஸ் அணி எடுத்த தீருவேன் என்று போட்டி போட்டு 2.20 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது.
ஆந்த்ரே சித்தார்த்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஏலத்தில் இறுதியாக தமிழகத்தை சேர்ந்த 18 வயது இளம் வீரரான ஆந்த்ரே சித்தார்த்தை சென்னை அணி அவரின் அடிப்படை விலையான 30 லட்சத்திற்கே எடுத்தது.
FINISHING OFF WITH THE THAMIZH BATTER -
— Chennai Super Kings (@ChennaiIPL) November 25, 2024
ஆண்ட்ரே சித்தார்த்🦁🔥#SuperAuction #UngalAnbuden pic.twitter.com/4zsnAC7uTJ
CSK-வில் நான்கு தமிழக வீரரகள்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய குற்றச்சாட்டு தமிழக வீரர்களை எடுக்கவே இல்லையென்று, பெயர் மட்டும் சென்னை ஆன தமிழக வீரர்கள் எங்கப்பா என்கிற கேள்விக்கு இறுதியாக இந்த ஏலத்தில் பதிலளித்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம். மொத்தம் நான்கு தமிழக வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அதே போல குஜராத் அணியும் நான்கு தமிழக வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்த ஐபிஎல் 2025 சீசனில் மொத்தம் 11 தமிழக் வீரர்கள் பங்கேறக உள்ளனர். அவர்களின் பட்டியல் பின்வருமாறு:
சென்னை சூப்பர் கிங்ஸ்: ரவிச்சந்திரன் அஷ்வின், விஜய் சங்கர், குர்ஜப்னீத் சிங், ஆந்த்ரே சித்தார்த்
குஜராத் டைடன்ஸ்: சாய் சுதர்சன், ஷாருக்கான், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர்
டெல்லி கேபிடல்ஸ்: தங்கராசு நட்ராஜன்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: மணிமாறன் சித்தார்த்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: வருண் சக்கரவர்த்தி