Gurjapneet Singh: பஞ்சாப் டூ சென்னை! ஸ்டம்புகளை சிதற வைக்கும் யார்க்கர் மன்னன்.. யார் இந்த குர்ஜப்னீத் சிங்?
Gurjapneet Singh CSK:சென்னை சூப்பர் கிங்ஸ், தமிழ்நாட்டு வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங்கை ரூ. 2.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
ஜெட்டாவில் (சவுதி அரேபியா) நடந்த ஐபிஎல் 2025 ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ், தமிழ்நாடு வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங்கை ரூ. 2.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
குர்ஜப்னீத் சிங்:
ஹரியானாவின் அம்பாலாவில் பிறந்த குர்ஜப்னீத் சிங், பஞ்சாப்பில் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொண்ட பிறகு தமிழ்நாட்டுக்கு தனது 17வது வயதில் இடம் பெயர்ந்தார். பின்னர் குருநானக் கல்லூரியில் சேர்ந்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். இந்த குருநானக் கல்லூரி மைதானம் தான் இந்திய சிமண்ட்ஸ் அணியின் சொந்த மைதானம் ஆகும். அதன் பின்னர் கடினமாக உழைத்து தமிழ்நாடு ரஞ்சி அணியில் இடம் பிடித்தார்.
உள்ளூர் போட்டிகள்:
தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி சீசனில், குர்ஜப்னீத் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி, 19.69 சராசரியில் 13 விக்கெட்டுகளையும், ஏழு இன்னிங்ஸ்களில் 50.30 ஸ்ட்ரைக் ரேட்டையும் எடுத்துள்ளார். புதுப்பந்து மற்றும் பழைய பந்துகள் இரண்டிலும் சிறப்பாக பந்து வீசும் திறன் இவரிடம் உள்ளது.
குர்ஜப்னீத்தின் உயரம் அவருக்கு ஒரு பலத்தை தருகிறது, பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைக்கும் பல ஆங்கில்களில் இவரை பந்துவீச அனுமதிக்கிறது. அவர் பவர்பிளே மற்றும் மிடில் ஓவர்கள் இரண்டிலும் பந்து வீசும் திறன் என்பதை நிரூபித்துள்ளார், இது எந்த பந்துவீச்சு தாக்குதலுக்கும் ஆழத்தை சேர்க்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், அவர் இந்திய அணியுடன் நெட் பவுலராக இருந்துள்ளார், விராட் கோலி போன்ற பெரிய வீரர்களை நெட் பவுலராக விக்கெட்டு அசத்தியுள்ளது அவரது திறமை குறித்து பேசுகிறது.
இதையும் படிங்க: Anshul Kamboj: இது தான் Pick! ஹரியானா எக்ஸ்பிரஸை தூக்கிய CSK.. யார் இந்த அன்ஷுல் கம்போஜ்!
கோலியின் அறிவுரை:
இவர் இந்திய அணியின் நெட் பவுலராக இருந்தார். அப்போது விராட் கோலிக்கு பந்து வீசும் போது அவர் எனக்கு அறிவுரை கூறினார்.“இந்தியாவில் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் ஜாம்பவான் புஜாராவிடம் பந்து வீச நான் மனதளவில் தயாராக இருந்தேன். வலது கை வீரர்களுக்கு எதிராக, அவர் [கோஹ்லி] என்னை ஸ்டம்பைச் சுற்றி வருமாறு பரிந்துரைத்தார், மேலும் பேட்ஸ்மேன்களுக்கு அசௌகரியமாக இருக்கும் வகையில் கோணங்களை மாற்றிக்கொண்டே இருக்க முடியும் என்று கூறினார். நான் புஜாரவுக்கு அரவுண்ட் தி ஸ்டம்ப்ஸ்சில் இருந்து பந்து வீசினேன், அந்த கோணத்தில் அவரை எல்பிடபிள்யூ ஆக்கினேன். நான் ஒவர் தி விக்கெட்டில் பந்து வீசினால், எல்பிடபிள்யூ பெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கோலி எனக்கு அறிவுரை வழங்கினார்.
Stumps : ||/
— Chennai Super Kings (@ChennaiIPL) November 25, 2024
Courtesy : Gurjapneet Singham! 🦁 #SuperAuction #UngalAnbuden
pic.twitter.com/h2GhOtgWkx
ஐபிஎல் பயணம்:
CSK உடன் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு, குர்ஜப்னீத் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் சிறப்பாக விளையாடி வந்தார், உள்ளூர் கிரிக்கெட் மற்றும் டிஎன்பிஎலில் அவரது நிலையான செயல்பாடுகள் CSK-வின் கவனத்தை ஈர்த்தது, முந்தைய ஐபிஎல் சீசன்களில் அவர் சிஎஸ்கேவின் நெட் பவுலராக சேர்க்கப்படுவதற்கு வழிவகுத்தது.