ஹூசைனி அதிரடிக்கும் மட்டும் ஃபேமஸ் இல்லை...சமையலுக்கும் தான்...
மறைந்த கராத்தே ஹுசைனி தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய அதிரடி சமையல் நிகழ்ச்சி தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது

ஷிஹான் ஹுஸைன்
திரைப்படம் மற்றும் கராத்தே பயிற்சிகள் மூலம் பிரபலமான ஹுசைனி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தான் உயிர் வாழ தினசரி 2 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது, நீண்டநாள் உயிர் வாழ முடியாது என அவர் அண்மையில் வெளியிட்ட வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து, திரைத்துறையை சேர்ந்த பலரும் நேரில் சென்று அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், நள்ளிரவு 1.45 மணியளவில் ஹுசைனி (60 வயது) உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஷிஹான் ஹுஸைனின் அதிரடி சமையல்
பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தாலும், பத்ரி படத்தில் விஜய் உடன் சேர்ந்து நடித்ததன் மூலம் நடிகரான பிரபலமானார். கடந்த 2022ம் ஆண்டு வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும், ஹுசைனியின் நடிப்பு கவனம் ஈர்த்தது. தனியார் தொலைக்காட்சியிலும் இவரது கராத்தே பயிற்சி நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதேபோல் அதிரடி சமையல் என்கிற பெயரிலும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சினிமாவை தாண்டி வில்வித்தை மற்றும் கராத்தே பயிற்சியாளராகவும் திகழ்ந்தார். நுற்றுக் கணகாணக்கானோருக்கு இது தொடர்பான பயிற்சிகளையும் அளித்துள்ளார்.
இதில் அவர் தொகுத்து வழங்கிய அதிரடி சமையல் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆண்களுக்கான அதிரடி சமையல். ஒரு வாழைக்காய் பஜ்ஜியை கூட ஷிஹான் தனது ஸ்டைலில் கராத்தே பயிற்சி மாதிரி மாற்றிவிடுவார். இன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியைப் போல் காமெடியான ஒரு நிகழ்ச்சியாக திகழ்ந்தது அதிரடி சமையல். சில ஆண்டுகள் இடைவெளி விட்டு இந்த நிகழ்ச்சி யூடியூபில் வெளியானது. இதில் மிக்ஸியை சுத்தியல் வைத்து அடித்து நொறுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

