Job Fair: காஞ்சிபுரத்தில் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு... செய்ய வேண்டியது என்ன?
Kanchipuram jobs: காஞ்சிபுரத்தில் 5000 காலி பணியிடங்களுக்காக, வருகின்ற மார்ச் 28ஆம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

Kanchipuram Jobs Alert: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
தனியார் வேலைவாய்ப்பு முகாம்
தமிழ்நாடு அரசால் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் மாதந்தோறும் ஒரு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களும், ஆண்டிற்கு இரண்டு பெரிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் தனியார் வேலைவாய்ப்பு முகாம் -Kanchipuram Jobs Fair
இதனை தொடர்ந்து, படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 2025-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 28.03.2025 வெள்ளிக்கிழமை அன்று நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கலந்து கொள்ளும் நிறுவனங்கள் என்ன ?
இம்முகாமில் Daicel Safety System India Pvt Ltd, Foxconn Hon Hai Technology India Mega Development, Kocon India, Padget Electronics Pvt Ltd, TATA Electronics Private Limited மற்றும் Z F Commercial Vehicle Control System ஆகிய தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 5000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர்.
வழிமுறைகள் மற்றும் தொடர்பு எண்கள்:
அதுசமயம் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ, 12வது மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். எனவே, 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 28.03.2025 அன்று காலை 09.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறும் மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

