IPL 2022, GT vs RR: ராஜஸ்தான் காலி, குஜராத் ஜாலி! உறுதியானது இறுதிப்போட்டிக்கான டிக்கெட்!
இலக்கை சேஸ் செய்த குஜராத் அணிக்கும் ஆரம்பத்தில் ரன் அவுட்டால் கில் வெளியேறினாலும், அடுத்து களமிறங்கிய மில்லர், கேப்டன் ஹர்திக் பாண்டியா அசத்தலாக ஆடினர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கான பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. முதல் பிளேப் ஆப் சுற்றில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் உள்ள அணிகள் மோதின.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராய்லர்ஸ் அணியும் இறுதிச்சுற்றுக்கு போட்டியிட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, ஃபீல்டிங் தேர்வு செய்தார். சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 47 ரன்கள் எடுத்து அவுட்டாக, அரை சதம் மிஸ்ஸானது. விக்கெட் சரிந்தாலும் இன்னொரு புறம் தனது அதிரடியை தொடர்ந்த பட்லர், அரை சதம் கடந்து விளையாடினார். சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டபோது, 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அநியாயமாக ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் அணி.
அதனை அடுத்து, இலக்கை சேஸ் செய்த குஜராத் அணியில் ஆரம்பத்திலேயே விக்கெட் சரிந்தது. ஓப்பனர் கில் ரன் அவுட்டாகி வெளியேறினாலும், அடுத்து களமிறங்கிய மில்லர், கேப்டன் ஹர்திக் பாண்டியா அசத்தலாக ஆடினர். 40 ரன்கள் எடுத்து ஹர்திக் பாண்டியாவும், 68 ரன்கள் எடுத்து டேவிட் மில்லரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசியில் 6 பந்துகளில்16 ரன்கள் தேவை என்றபோது அடுத்தடுத்து ஹாட்-ட்ரிக் சிக்சர்களை தெறிக்கவிட்டு இலக்கை எட்ட உதவினார் டேவிட் மில்லர்.
Congratulations to the @gujarat_titans as they march into the Final in their maiden IPL season! 👏 👏
— IndianPremierLeague (@IPL) May 24, 2022
Stunning performance by @hardikpandya7 & Co to beat #RR by 7⃣ wickets in Qualifier 1 at the Eden Gardens, Kolkata. 🙌 🙌
Scorecard ▶️ https://t.co/O3T1ww9yVk#TATAIPL | #GTvRR pic.twitter.com/yhpj77nobA
நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு நடைபெற்ற வீரர்கள் ஏலத்தின் முதல் சுற்றில் டேவிட் மில்லரை யாரும் வாங்கவில்லை. பின்பு, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்ட இரண்டாவது சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில், இன்று நடைபெற்ற முக்கியமான போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி குஜராத் அணியை இறுதிப்போட்டிக்கு எடுத்துச் சென்று அசத்தி இருக்கிறார் மில்லர் கில்லர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்