(Source: ECI/ABP News/ABP Majha)
Viral Video : மாலத்தீவில் கடலில் தத்தளித்த தம்பதி.. உயிரை காப்பாற்றிய ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் வீரர்! வைரல் வீடியோ!
ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் வீரரான செர்ஜியோ அரிபாஸ் தற்போது மாலத்தீவில் கோடை விடுமுறையை கழித்து வருகிறார்.
மாலத்தீவில் கடலில் மூழ்கிய தம்பதிகளின் உயிரை ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் வீரர் செர்ஜியோ அரிபாஸ் காப்பாற்றியுள்ளார்.
கடந்த ஜூன் 14 ஆம் தேதி ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியது UEFA (Union of European Football Associations) யுஇஎஃப்ஏ யூரோ கோப்பை 2024 தொடர். அந்தவகையில் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இத்தாலி உட்பட மொத்தம் 24 அணிகள் விளையாடுகின்றன. லீக், நாக் – அவுட் என மொத்தம் 51 போட்டிகள் நடைபெறுகிறது.
மாலத்தீவில் ரியல் மாட்ரிட் முன்னாள் வீரர்:
இதனிடையே ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் வீரரான செர்ஜியோ அரிபாஸ் தற்போது மாலத்தீவில் கோடை விடுமுறையை கழித்து வருகிறார். இச்சூழலில்தான் மாலத்தீவில் கடலில் மூழ்கிய தம்பதிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார். அதாவது கோடை விடுமுறையில் உள்ள இவர் அங்குள்ள கடலில் குளித்துகொண்டிருக்கிறார்.
Almeria forward and ex-Real Madrid man Sergio Arribas has been seen helping to save a drowing couple while on holiday.pic.twitter.com/UFD80D4FYm
— Football España (@footballespana_) June 17, 2024
அப்போது அவருக்கு எதிரே ஒரு தம்பதியனரும் குளிக்கின்றனர். எதிர்பாராத விதமாக அவர்கள் தண்ணீருக்குள் மூழ்க அவர்களை செர்ஜியோ அரிபாஸ் வேகமாக சென்று காப்பாற்றுகிறார்.
இது தொடர்பான வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. ரசிகர்கள் பலரும் செர்ஜியோ அரிபாஸை வாழ்த்தி வருகின்றனர். சரியான நேரத்தில் அந்த தம்பதிகளை நீங்கள் காப்பாற்றி விட்டீர்கள் என்பது போன்ற கமெண்ட்டுகளை கூறி வருகின்றனர்.
செர்ஜியோ அரிபாஸ்:
சாண்டியாகோ பெர்னாபியூ கிளப்பிற்காக விளையாடி வந்த அரிபாஸ் அந்த கிளப்பில் இருந்து விலகினார். பின்னர் பிரபலமான கிளப்பான ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடினார். அதாவது 6 மில்லியன் யூரோக்களுக்கு இவரை ரியல் மாட்ரிட் அணி விலைக்கு வாங்கியது. தற்போது அல்மேரியா அணிக்காக விளையாடிவருகிறார் செர்ஜியோ அரிபாஸ்.
மேலும் படிக்க: UEFA Euro 2024: யுஇஎஃப்ஏ யூரோ கோப்பை.. 23 வினாடிகளில் முதல் கோல்; வரலாற்று சாதனை படைத்த அல்பேனியா!
மேலும் படிக்க: "பாபர் அசாம் தகுதியற்றவர்" இந்திய முன்னாள் வீரர் சேவாக் ஆவேசம் - ஏன் அப்படி சொன்னார்?