மேலும் அறிய

IIT Madras: இந்திய கல்வித்துறையிலேயே 10 ஆண்டாக முன்னிலை; இத்தனை பிரிவுகளில் ஐஐடி சென்னை டாப்பா?

NIRF 2025 Rankings: பத்தாண்டுகால சிறப்பைக் கொண்டாடுகிறது ஐஐடி சென்னை... NIRF தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

என்ஐஆர்எஃப் தரவரிசை 2025-ன்படி தொடர்ச்சியாக 10-வது ஆண்டாக ‘பொறியியல்’ பிரிவிலும், தொடர்ச்சியாக 7-வது ஆண்டாக ஒட்டுமொத்த’ பிரிவிலும் இக்கல்வி நிறுவனம் முதலிடத்தைப் பெற்று, இந்திய கல்வித்துறையில் தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

ஐஐடி சென்னை, இந்திய அரசின் கல்வி அமைச்சக தேசிய கல்வி நிறுவன தரவரிசைக் கட்டமைப்பில் (National Institutional Rankings Framework (NIRF) முதலிடத்தைத் தக்கவைத்து, பொறியியல் கல்வியில் பத்தாண்டுகால சிறப்பைக் கொண்டாடுகிறது. டெல்லியில் நேற்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்திய கல்வித் துறையிலேயே முன்னிலை

இந்திய கல்வி முறையில் முன்னுதாரணமாகத் திகழ்ந்து சாதனை படைக்கும் விதமாக, என்ஐஆர்எஃப் 2025-ல் தொடர்ச்சியாக 10-வது ஆண்டாக ‘பொறியியல்’பிரிவிலும், தொடர்ச்சியாக 7-வது ஆண்டாக ‘ஒட்டுமொத்த’ பிரிவிலும் முதலிடத்தைப் பிடித்து, இந்திய கல்வித் துறையில் முன்னிலை வகிக்கும் தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

என்ஐஆர்எஃப் தரவரிசை அறிமுகப்படுத்தப்பட்டது முதல் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் பிரிவில் ஐஐடி சென்னை நம்பர்-1 இடத்தையே பிடித்துள்ளது.

IIT Madras: இந்திய கல்வித்துறையிலேயே 10 ஆண்டாக முன்னிலை; இத்தனை பிரிவுகளில் ஐஐடி சென்னை டாப்பா?

கண்டுபிடிப்புகள் பிரிவிலும் முதலிடம்

கண்டுபிடிப்புகள் பிரிவில் (முன்னர் அடல் நிறுவனங்களின் புத்தாக்க சாதனைகள் தரவரிசை என்று அழைக்கப்பட்டது) இக்கல்வி நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது, கடந்த ஆண்டு இதே பிரிவில் 2-வது இடத்தைப் பிடித்தது.

சமீபத்தில், உலகத் தரம் வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கவும், ஆழமான தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்களை நிறுவவும், புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவுப் பள்ளியை ஐஐடி கல்வி நிறுவனம் தொடங்கியுள்ளது. தொழில்முனைவோருக்கான பல்கலைக்கழகங்களின் உலகளாவிய வரைபடத்தில் இக்கல்வி நிறுவனத்தை இடம்பெறச் செய்வதே இதன் நோக்கமாகும்.

‘ஆராய்ச்சி நிறுவனங்கள்’ பிரிவில், ஐஐடி மெட்ராஸ் கடந்தாண்டு 2-வது இடத்தைப் பிடித்து, பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்திற்கு அடுத்த இடத்தில் இருந்தது. குறிப்பாக, இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘நிலைத்தன்மைக்கான மேம்பாட்டு இலக்குகள்’ (Sustainability Development Goals - SDG) பிரிவில் ஐஐடி மெட்ராஸ் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்தத் துறையில் செய்யப்பட வேண்டிய முன்மாதிரிப் பணிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில், நிலைத்தன்மைக்கான பள்ளியை இக்கல்வி நிறுவனம் அக்டோபர் 2023-ல் தொடங்கியது.

ஐஐடி மெட்ராஸ் தனது வரலாற்றில் முதன்முறையாக, 2024-25 நிதியாண்டில் 100-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப்களுக்கு தொழில் ஊக்குவிப்பு செய்தது. 2024- 25-ம் ஆண்டில் 417 காப்புரிமைகளுக்கு விண்ணப்பத்தை அளித்திருந்தது. இது ஐஐடி-எம் இயக்குநரின் நாளொன்றுக்கு ஒரு காப்புரிமை என்ற தொலைநோக்கு இலக்கை விட அதிகமாகும்.

சர்வதேச தரவரிசையிலும் இந்த ஆண்டு ஐஐடி மெட்ராஸ் தனது நிலையை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. QS உலக பல்கலைக்கழக தரவரிசை (QS WUR) 2026-ல், கடந்தாண்டு 227-வது இடத்தில் இருந்த ஐஐடிஎம் இந்தாண்டு 180-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக ஐஐடி சென்னை தெரிவித்துள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

டெட் தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு, மதிப்பெண்களில் தளர்வு: ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள்
டெட் தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு, மதிப்பெண்களில் தளர்வு: ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள்
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
Embed widget