மிஸ் பண்ணிடாதீங்க; சிவில் சர்வீஸ் பயிற்சியில் சேர்ந்து படிக்கலாம்- அரசே அழைப்பு!
சிவில் சர்வீஸ் பயிற்சியில் சேர்ந்து படிக்க அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் அழைப்பு விடுத்துள்ளது.

அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம், நான் முதல்வன் போட்டித் தேர்வு பிரிவுடன் இணைந்து நடத்தப்பட்ட 2026-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் தேர்வாணைய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு பயிற்சிக்கான பொது நுழைவுத் தேர்வில் பங்கு பெற்றவர்களின் முழுமையான மதிப்பெண் பட்டியல், அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் (www.civilservicecoaching.com) வெளியிடப்பட்டுள்ளது.
எத்தனை பேர் தேர்வு?
மதிப்பெண் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆர்வலர்கள் சென்னை முழுநேரப் பயிற்சிக்கு 225 நபர்கள் மற்றும் பகுதி நேரப் பயிற்சிக்கு 100 நபர்கள் மற்றும் மதுரை முழு நேர பயிற்சிக்கு 100 நபர்கள், கோயம்புத்தூர் முழு நேர பயிற்சிக்கு 100 நபர்கள் என மொத்தமாக 525 நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு செய்யப்படுவது எப்படி?
மதிப்பெண் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆர்வலர்களில் விண்ணப்பிக்கும் ஆர்வலர்களின் தரவரிசை மற்றும் இட ஒதுக்கீட்டு விதிகளின்படி கலந்தாய்விற்கு அழைக்கப்படுவர்.
சென்னை (முழு நேரம், பகுதி நேரம்) மற்றும் கோயம்புத்தூர் (முழு நேரம்). மதுரை (முழு நேரம்) ஆகிய அனைத்து மையங்களுக்கும் கலந்தாய்வு சென்னை-28 -ல் உள்ள அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் மட்டுமே நடைபெறும்.
தற்காலிக சேர்க்கை ஆணை
கலந்தாய்வில் ஆர்வலர்கள் தங்களது விருப்ப மையங்களை தெரிவு செய்யலாம். கலந்தாய்வின் போது மூல ஆவணங்கள் சரிப்பார்க்கப்பட்டு (Certificate Verification) தற்காலிக சேர்க்கை ஆணை (Provisional Allotment Order) வழங்கப்படும்.
ஏற்கனவே இப்பயிற்சி மையங்களில் முழுநேர மற்றும் பகுதி நேர பயிற்சி பெற்றவர்கள் இரண்டாவது முறை முறையே முழுநேர மற்றும் பகுதி நேர பயிற்சிக்கு விண்ணப்பிக்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பப் பதிவு துவங்கும் நாள்- 09.09.2025
விண்ணப்பப் பதிவு முடிவடையும் நாள் - 14.09.2025
முதற்கட்ட தெரிவுப் பட்டியல் வெளியீடு - 17.09.2025
கலந்தாய்வு (ம) சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாட்கள் - 22.09.2025, 23.09.2025, 24.09.2025
தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு விடுதி அறை ஒதுக்கீடு (ம) காப்புத் தொகை செலுத்துதல்- 29.09.2025, 30.09.2025
முதல்நிலை தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நாள் - 03.10.2025
கலந்தாய்வு (ம) சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடம்: அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் "காஞ்சி" பசுமை வழிச்சாலை, சென்னை-28.
மேலும், விரிவான விவரங்கள் பயிற்சி மையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் (www.civilservicecoaching.com) வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு 044-24621475 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும், 9345766957 என்ற புலன எண்(Whatsapp) மூலமாகவும், aicscc.gov@gmail.com என்ற அலுவலக மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று கூடுதல் தலைமைச் செயலாளர், பயிற்சித் துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்களுக்கு: www.civilservicecoaching.com






















