மேலும் அறிய

New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?

நடப்பு செப்டம்பர் மாதம் சந்தையில் அறிமுகமாக உள்ள புதிய ஸ்கூட்டர்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

இந்தியாவில் நாளுக்கு நாள் இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பைக் பயன்பாட்டை காட்டிலும் ஸ்கூட்டரையே அதிகம் பயன்படுத்த மக்கள் விரும்புகின்றனர். குறிப்பாக, தற்போது மின்சார வாகனங்களையே மக்கள் அதிகளவு விரும்புவதால் அதையே முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கின்றனர்.

அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதம் சந்தையில் அறிமுகமாக உள்ள இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? அதன் விலை? மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

1. Suzuki E Access:

சுசுகி நிறுவனத்தின் வெற்றிகரமான ஸ்கூட்டர் Access. பெட்ரோலில் ஓடும் இதன் மின்சார வெர்சன் Suzuki e-Access. தரத்தில் எந்த குறையும் இல்லாத அளவிற்கு இதை வடிவமைத்துள்ளனர். இதன் விலை ரூபாய் 1 லட்சம் முதல் ரூபாய் 1.20 லட்சம் வரை இருக்கும். இது செப்டம்பர் மாதம் சந்தையில் அறிமுகமாக உள்ளது. 

New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?

இது TVS iQube, Ola S1 Air, Ather Rizta, மற்றும் Bajaj Chetak ஆகிய இ ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனை இணைத்துக் கொள்ளும் வசதி, கீ லெஸ் சிஸ்டம், வேகமாக சார்ஜ் ஏறும் வசதி இதில் உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 95 கி.மீட்டர் வரை செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 3.072 கிலோ வாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சார்ஜ் ஏறுவதற்கு 2.12 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும். மணிக்கு 71 கி.மீட்டர் வேகத்தில் இது செல்லும் ஆற்றல் கொண்டது. நகர்ப்புறங்களில் செல்வதற்கு ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி ஆற்றலை அதிகரிக்கும் பணிகளும் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2. VLF Mobster:

இந்த மாதம் 25ம் தேதி நாட்டில் அறிமுகமாக உள்ளது இந்த VLF Mobster ஸ்கூட்டர். இது ஸ்போர்ட்ஸ் ரகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோலில் ஓடும் திறன் கொண்ட இந்த ஸ்கூட்டர் இரண்டு வகையிலான எஞ்ஜினில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு எஞ்ஜின் 125 சிசி எஞ்ஜின் ஆகும். இது 11.7 என்எம் டார்க் இழுதிறனும், 11.9 பிஎச்பி ஆற்றலும் கொண்டது.  மற்றொன்று 180 சிசி எஞ்ஜின் திறன் கொண்டது.  இது 15.7 என்எம் டார்க் இழுதிறனும், 17.7 பிஎச்பி ஆற்றலும் கொண்டது. 

New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?

இதன் விலை ரூபாய் 1.70 லட்சம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பெட்ரோல் டேங்கில் 8 லிட்டர் வரை நிரப்பிக் கொள்ளலாம். டேஷ்போர்ட் டிஜிட்டல்மயமாக உள்ளது. 4 ஸ்ட்ரோக் 4 வால்வ் single cylinder water cooled engine இதில் உள்ளது. இதில் கிக் ஸ்டார் கிடையாது. செல்ஃப் ஸ்டார்ட் மட்டுமே ஆகும். டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. மொத்த எடை 122 கிலோ ஆகும்.

3. BGauss RUV 350:

ஓலா, ஏதர் போன்ற நிறுவனங்களுக்கு போட்டி அளிக்கும் வகையில் சந்தையில் திகழும் நிறுவனம்  BGauss. நடப்பு செப்டம்பர் மாதம் இவர்கள் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ள இ ஸ்கூட்டர் இந்த  BGauss RUV 350 ஆகும். வசீகரமான தோற்றத்துடன் எளிதில் கையாளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதில் 2.3 கிலோவாட் ரோபஸ்ட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 

New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?

நகர்ப்புறத்திற்கும், கிராமப்புறத்திற்கும் ஏற்ற வகையில் பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 105 கி.மீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது. இதன் விலை ( எக்ஸ் ஷோரூம்) ரூபாய் 1.19 லட்சம் ஆகும். மணிக்கு 75 கி.மீட்டர் வேகத்தில் செல்லும். 3 வருடம் அல்லது 36 ஆயிரம் கிலோ மீட்டர் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. சார்ஜ் ஏற்றுவதற்கு 2 மணி நேரம் 35 நிமிடங்கள் ஆகும். நவீன வசதிகளுடன் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

இந்த 3 ஸ்கூட்டர்களில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான வாகனத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம். பயணிகளின் பாதுகாப்பு, அவர்களின் தேவை, பிக்கப், மைலேஜ் ஆகியவற்றை மனதில் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Hero Vida VX2 Go: 128 கி.மீ., மைலேஜ்.. பட்ஜெட் விலை.. ஹீரோ Vida VX2 Go எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாமா?
Hero Vida VX2 Go: 128 கி.மீ., மைலேஜ்.. பட்ஜெட் விலை.. ஹீரோ Vida VX2 Go எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாமா?
Hyundai Cars: அடிமேல் அடி வாங்கிய ஹூண்டாய் கார்கள்.. ரூ.480 கோடி நஷ்டம்.. என்ன காரணம்?
Hyundai Cars: அடிமேல் அடி வாங்கிய ஹூண்டாய் கார்கள்.. ரூ.480 கோடி நஷ்டம்.. என்ன காரணம்?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Embed widget