Madharaasi Movie Review: ஆக்ஷனில் வெறித்தனம் கட்டும் சிவகார்த்திகேயன்...மதராஸி திரைப்பட விமர்சனம்
Madharaasi Movie Review in Tamil: ஏ ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயன் கூட்டணியில் ரொமாண்டிக் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள மதராஸி படத்தின் முழு விமர்சனத்தை பார்க்கலாம்
A R Murugadoss
Sivakarthikeyan , Vidyut Jammwal , Rukmini Vasanth , Biju Menon
Theatrical Release
மதராஸி படத்தின் கதை
வொத்யுத் ஜம்வால் மற்றும் ஷபீர் தலைமையிலான ஆயுத கடத்தல் கும்பல் ஒன்று தமிழ்நாட்டிற்குள் மிகப்பெரியளவில் ஆயுதங்களை விநியோகம் செய்ய திட்டமிடுகிறது. சிறப்பு படை அதிகாரியான பிஜூ மேனன் தலைமையிலான குழு அவர்களை தடுக்க முயன்று தோற்கிறது.
மறுபக்கம் சிறிய வயதில் தனது குடும்பத்தை ஒரு விபத்தில் இழக்கும் சிவகார்த்திகேயன் மனநலம் பாதிக்கப்படுகிறார். யார் ஆபத்தில் இருந்தாலும் தன்னையும் மீறி உதவி செய்கிறார். நாயகி ருக்மினிய்யை சந்தித்த பின் அவர் குணம்மடைகிறார். இந்த ஆயுத கடத்தலை தடுக்க போலீசுக்கு சிவகார்த்திகேயன் எப்படி உதவுகிறார் என்பதே மதராஸி படத்தின் கதை.
மதராஸி விமர்சனம்
பெரிய ஸ்டார்களின் படங்களில் கதையம்சம் குறைந்து ஆக்ஷன் மட்டுமே முன்னிறுத்தப்படும் நிலையில் எஸ்.கே அதே ரூட்டை பின்பற்றவில்லை. அமரன் படத்தில் மாஸ் நடிகராக தன்னை நிலைநிறுத்திய சிவகார்த்திகேயன் மதராஸி படத்தில் தன்னை முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் ஹீரோவாக நிரூபித்திருக்கிறார். தற்சமயம் கோலிவுட் சினிமாவின் ஆக்ஷன் ஹீரோக்களில் ஒருவர் என்றே எஸ்.கே வை சொல்லலாம். அதே நேரம் இந்த ஆக்ஷன் காட்சிகள் மைய கதையில் இருந்து விலகாமல் செல்வதே படத்தின் பெரிய பலம். எஸ்.கே வின் பாசிட்டிவான நகைச்சுவைத் தன்மை குறையாமல் இரண்டையும் சரியாக கையாண்டுள்ளார் இயக்குநர் முருகதாஸ். சம்பிரதாயத்திற்கு இல்லாமல் நாயகி படத்தின் முக்கிய அங்கமாக இருக்கிறார். துப்பாக்கி பட்த்தை விட ஒரு படிமேல் வில்லன் வித்யுத் ஜம்வால் பாராட்டுக்களையும் கைதட்டல்களையும் அள்ளுகிறார். பிஜூ மேனன் , விக்ராந்த் ஆக்யோரின் கதாபாத்திரங்கள் சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளன. அனிருத்தின் பாடல்கல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் பின்னணி இசை அபாரம்
மதராஸி சிவகார்த்திகேயன் கரியரில் ஒரு பெரிய பாய்ச்சல்.




















