ராமதாஸ் vs அன்புமணி! மகளிர் அணி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு! தைலாபுரத்தில் நடந்த முக்கிய ஆலோசனை!
அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம்

விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் தைலாபுரம் இல்லத்தில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என வலியுறுத்தினர்.
பாட்டாளி மக்கள் கட்டியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடைபெற்றது. கடந்த நான்கு நாட்களாக பாமகவின் நிர்வாக குழு மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் பல்வேறு கட்டங்களாக கூட்டங்கள் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றுவந்த நிலையில் இன்று மாநில நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகிகள் மகளிர் அணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இந்த கூடத்தில் கட்சியின் பல்வேறு வளர்சி பணிகள் மற்றும் வரும் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அன்புமணி தரப்பில் நாளை மகாபலிபுரத்தில் மகளிர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுவதால் பல்வேறு அழைப்புகள் மகளிர் அணியை சார்ந்தவர்களுக்கு வருவதால் மருத்துவர் ராமதாஸ் பக்கம் தான் நிற்போம் என கூட்டத்தில் மகளிர் அமைப்பினர் தெரிவித்தனர். மேலும் ராமதாஸ் ஆதரவாளர்கள் மகளிர் அணியை சார்ந்தவர்கள் அந்த கட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என தொலைபேசியில் தெரிவியுங்கள் என மகளிர் அணி நிர்வாகிகள் தெரிவித்தனர். மகாபலிபுரத்தில் இன்று அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்ற நிலையில் தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் தலைமையில் இன்று மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அடுத்தடுத்து பொதுக்குழுவை போட்டி போட்டு நடத்தப்பட்ட நிலையில் இன்று அன்புமணியும், ராமதாசும் போட்டி போட்டு கொண்டு மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய மகளிர் அணி தலைவர் சுஜாதா., நாளை ஈசிஆரின் மகளிர் சங்கத்தின் கூட்டம் பெரிய அளவில் நடத்த இருப்பதாக அங்கே ஏற்பாடு செய்திருப்பதாக அதற்கு ஒரு மகளிர் கூட போகக்கூடாது... நாம் 103 வாட்சப் குழு வைத்திருக்கிறோம் ஒவ்வொரு குழுவிலும் மாநில செயலாளர்கள் அட்மினாக உள்ளீர்கள். அனைவரும் அதில் உள்ள நம்பரை எடுத்து அவர்களிடம் பேசுங்கள் விடிய விடிய பேசுங்கள் அவர்கள் யாரும் அங்கே செல்லக்கூடாது என சொல்லுங்கள் என சுஜாதா பேசினார்.





















